புத்தளம் காவற்துறையின் தடயவியல் பிரிவுக்கு சொந்தமான ஜீப், சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து புத்தளம் கூட்டுறவு கோப் சிட்டி சந்தைக்குள் மோதியதில் ஜீப், கட்டிடம் மற்றும் பல உபகரணங்களுக்கு சேதம் விளைவித்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த விபத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என புத்தளம் தலைமையக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கோப்சிட்டி கடையின் முன் ஜீப் நிறுத்தி வைக்கப்பட்டு, மீண்டும் செல்ல தயாரான போது, திடீரென கடையின் மீது அதிவேகமாக மோதியது போலீஸ் விசாரணையில் உறுதியானது.
விபத்தின் போது முகாமையாளரும் மற்றுமொரு பணியாளரும் உடனிருந்ததாகவும், எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.



