Pagetamil
முக்கியச் செய்திகள்

மயிலத்தமடு மேய்ச்சல் தரைக்கு சென்ற தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தடுத்து நிறுத்தம்: அம்பிட்டிய தேரர் அசிங்கப் பேச்சு!

மட்டக்களப்பு தமிழ் மக்களின் பாரம்பரிய நிலமான மயிலத்தமடு, மாதவனை பகுதிக்கு சென்ற தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராஜா கஜேந்திரனை சட்டவிரோத சிங்கள குடியேற்றவாசிகள் தடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அம்பிட்டிய சுமணரத்ன தேரர் காட்டுத்தனமாக நடந்து, முகம் சுளிக்க வைத்தார்.

தமிழ் மக்களின் கால்நடை மேய்ச்சல் தரையான மயிலத்தமடு, மாதவனை பகுதியில் மகாவலி அதிகாரசபையால் சட்டவிரோத சிங்கள குடியேற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சட்டவிரோத குடியேற்றவாசிகளை அப்புறப்படுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும், நீதிமன்றமும் கட்டளையிட்டும், சட்டவிரோத குடியேற்றவாசிகள் அங்கிருந்து நகரவில்லை.

குறிப்பிட்ட பகுதிக்கு மாடுகளை மேய்ச்சலுக்கு கொண்டு செல்வதில் உள்ள சவால்களை சுட்டிக்காட்டி, பண்ணையாளர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தலும் ஈடுபட்டுள்ளனர்.

மேய்ச்சல்தரை உரிமைக்காக குரல் கொடுப்பவர்களின் மாடுகளை இலக்கு வைத்து சுட்டுக்கொல்லப்படும் சம்பவங்களும் பதிவாகி வருகிறது. தமிழ் மக்களை அச்சுறுத்தவும், சட்டவிரோத குடியேற்றவாசிகளை மேலும் உற்சாகப்படுத்த, மூன்றாம் தரப்பொன்று இந்த நாசகார வேலையில் ஈடுபட்டுள்ளதா என்ற சந்தேகமும் பண்ணையாளர்களிடம் உள்ளது.

இந்த பின்னணியில் இன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் மயிலத்தமடு, மாதவனை பகுதிக்கு சென்றுள்ளனர்.

அவர்களின் பயணம் இரகசியமாக வைக்கப்பட்டிருந்த போதும், முற்கூட்டியே தகவலறிந்த சிங்கள சட்டவிரோத குடியேற்றவாசிகள் வளமண்டி பாலத்தில் வீதித்தடைகளை ஏற்படுத்தி, பாலத்தை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சிங்கள இனவாத பிக்குவான அம்பிட்டிய சுமணரத்ன தேரர், அங்கு வந்து காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொண்டார். நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஊடகங்களுடன் பேசிக் கொண்டிருந்த போது, கத்திக்கூச்சலிட்டு ரகளையில் ஈடுபட்டார்.

இதையடுத்து, கஜேந்திரகுமார் தரப்பினர் மேற்கொண்ட நகராமல் பொலிசார் தடையேற்படுத்தியிருந்தனர்.

இந்த பயணத்துக்கு முன்னதாக, மயிலத்தமடுவுக்கு செல்வதற்கு கரடியனாறு பொலிசாரிடம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் நேற்று அனுமதி கோரியிருந்தனர். அதற்கு, கரடியனாறு பொலிசார் மறுப்பு தெரிவித்தனர். இதையடுத்து, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நேற்றே, ஜனாதிபதி செயலாளரை தொடர்பு கொண்டு விடயத்தை தெரிவித்தார். இந்த நாட்டில் யாரும் எங்கும் செல்வதற்கு அனுமதியுண்டு என்றும், நீங்கள் மயிலத்தமடு செல்லலாம் என்றும் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து, பொலிஸ் உயர்மட்டத்திலிருந்தும் இதற்கான அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

எனினும், இன்று கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தரப்பினர் மயிலத்தமடு சென்ற போது, பொலிசாரால் வழிமறிக்கப்பட்டார். ஜனாதிபதி கடந்த ஒக்ரோபரில் எடுத்த தீர்மானத்தின்படி யாரும் அங்கு செல்ல முடியாதென பொலிசார் குறிப்பிட்டனர்.

இதையடுத்து, கஜேந்திரகுமார் ஜனாதிபதி செயலாளரை தொடர்பு கொண்டு விடயத்தை தெரிவித்தார். யாரும் உங்களை மறிக்க முடியாது என தெரிவித்த ஜனாதிபதி செயலாளர், உரிய தரப்பினரை தொடர்பு கொண்டு விட்டு, மீள அழைப்பதாக தெரிவித்திருந்தார். எனினும், அவர் மீண்டும் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கு அழைப்பேற்படுத்தவில்லை. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பலமுறை அழைத்த போதும், பதிலளிக்கவில்லை.

சுமார் ஒன்றரை மணித்தியாலங்கள் வரை அங்க காத்திருந்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தரப்பினர், மீண்டும் திரும்பி வந்தனர்.

–க.ருத்திரன்-

இதையும் படியுங்கள்

முன்னர் ஒன்றாக வந்தீர்கள்… இப்போது மூன்றாக வந்துள்ளீர்கள்; தமிழர்களுக்கிடையிலானதே மீனவர் பிரச்சினை: மோடி- தமிழ் கட்சிகள் சந்திப்பில் பேசப்பட்டவை!

Pagetamil

இலங்கை- இந்தியாவுக்கிடையில் 7 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!

Pagetamil

நரேந்திர மோடிக்கு பெரும் வரவேற்பு!

Pagetamil

‘என் மனைவியை தொட்டால்…’: ஜனாதிபதி அனுரவை எச்சரித்த மஹிந்தவின் சகா!

Pagetamil

Update: புதிய வாகன பதிவுகளுக்கு மட்டுமே வரி அடையாள எண் தேவை!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!