29.3 C
Jaffna
March 5, 2025
Pagetamil
இலங்கை

சதொசவில் 10 பொருட்களின் விலைகள் குறைப்பு!

எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு லங்கா சதொசவில் 10 பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.

இன்று (15) முதல் டிசம்பர் 31 ஆம் திகதி வரை இந்த விலை குறைப்பு அமுலில் இருக்கும் என லங்கா சதொச தலைவர் பசந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

சதொச பால் மாவின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 940 ரூபாவாகும்.

இறக்குமதி செய்யப்பட்ட 425 கிராம் டின் மீனின் விலை 55 ரூபாவினாலும் 155 கிராம் டின் மீனின் விலை 10 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளது.

மேலும் 425 கிராம் உள்ளுர் டின் மீனின் விலை 20 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை வெளிநாட்டு மற்றும் உள்ளூர் உருளைக்கிழங்கின் விலை 15 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.

சிவப்பு நாடு மற்றும் வெள்ளை நாடு அரிசியின் விலை கிலோவுக்கு 15 மற்றும் 5 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.

ஒரு கிலோ கொண்டைக்கடலையின் விலை 5 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சதொச ஊடாக மக்கள் மிகக் குறைந்த விலையில் சீனியை பெற்றுக்கொள்ள முடியும் எனவும், ஒரு கிலோ சீனி 275 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாகவும் சதொச அறிவித்துள்ளது.

ஒரு முட்டை 35 ரூபாய்க்கு வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

பண்டிகை காலத்தை முன்னிட்டு 1 கிலோ வெங்காயத்தின் விலை 400 ரூபாவிற்கு குறைவாகவே காணப்படும் எனவும் சதொச தெரிவித்துள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

பாடசாலை மாணவர்கள், சீசன் டிக்கெட்காரர்களை ஏற்றாத இ.போ.ச பேருந்துகளா?: 1958 இற்கு அழையுங்கள்!

Pagetamil

வாயில் வந்தபடி ‘வெடிக்கிறார்களா’ ஜேவிபியினர்?

Pagetamil

வட்டாரக்கட்சிகளின் போலிக்கோசமும்… சீ.வீ.கே யின் அவசரமும்: புதிய கூட்டணியின் பின்னணி சங்கதிகள்!

Pagetamil

மருத்துவர்களின் வேலை நிறுத்தம் ஒத்திவைப்பு!

Pagetamil

வெலிகம பதில் பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு பிணை

Pagetamil

Leave a Comment