புத்தளத்தில் தங்கம் மீட்பு!

Date:

புத்தளம் பட்டலங்குண்டு தீவுக்கு அண்மித்த கடற்பரப்பில் நேற்று (08) கடற்படையினர் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையில் கடற்பகுதியில் மூழ்கியிருந்த தங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு 04 கிலோவுக்கும் அதிகமான தங்கம் கண்டுபிடிக்கப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.

இதனுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் இருவர் டிங்கி படகு ஒன்றுடன் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 27 மற்றும் 35 வயதுடைய கல்பிட்டி பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடத்தல்காரர்கள் இந்த தங்கத்தை பின்னர் எடுத்துச் செல்லலாம் என்ற நம்பிக்கையில் நீருக்கு அடியில் மூழ்கடித்ததாக நம்பப்படுகிறது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கட்டுநாயக்க சுங்கத் தடுப்பு அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

spot_imgspot_img

More like this
Related

குட்டிமணி, தங்கதுரை சிலை விவகாரம் – சதீஸிடம் 3 மணி நேரம் விசாரணை!

வல்வெட்டித்துறை நகர சபை முன்னாள் உறுப்பினர் கந்தசாமி சதீஸிடம் பயங்கரவாத தடுப்பு...

நவம்பர் 09 இல் அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் ஒரு நாள் சுகயீன விடுமுறை போராட்டம்-

கிழக்கு மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர் தொழிற்சங்கமானது (EPDOTU), ஒருங்கிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர்...

காட்டு யானை தாக்கியதில் இராணுவ சார்ஜென்ட் உயிரிழப்பு

அம்பாறை புறநகர்  பகுதியில் காட்டு யானை தாக்கியதில் இராணுவ வீரர் உயிரிழந்துள்ளதாக...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்