மதம் மாறிய கள்ளக்காதல் சம்பவம் ஒன்றினால் புத்தளம், வண்ணாத்திவில்லு பொலிசார் திக்குமுக்காடிப் போயுள்ளனர்.
பிறந்த குழந்தையை ஏற்றுக்கொண்டு, மதம் மாறி தன்னை திருமணம் செய்யுமாறு கள்ளக்காதலி வற்புறுத்த… மதம் மாற்றி திருமணம் செய்ய கள்ளக்காதலி முயற்சிக்கிறார் என கள்ளக்காதலன் கம்பி நீட்ட, வண்ணாத்திவில்லு பொலிஸார் செய்வதறியாது திண்டாடி வருகின்றனர்.
எழுவன்குளத்தில் வசிக்கும் 23 வயதுடைய முஸ்லிம் பெண்ணொருவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த 37 வயதான சிங்களவர் ஒருவருக்கும் கள்ளக்காதல் உறவு ஏற்பட்டுள்ளது.
கள்ளக்காதலனுக்கு ஏற்கெனவே திருமணமாகியிருந்தது. அவரது மனைவி வெளிநாட்டுக்கு பணிப்பெண்ணாக சென்று விட்டார். அவர்களிற்கு 17 வயதான மகன் ஒருவரும் உள்ளார்.
இந்த நிலையில், கள்ளக்காதலினால் 23 வயதான முஸ்லிம் யுவதி கர்ப்பமாகி, கடந்த மாதம் 19ஆம் திகதி புத்தளம் ஆதார வைத்தியசாலையில் பெண் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார்.
அதன் போது குறித்த நபர் குழந்தையையும் பெண்ணையும் ஏற்றுக்கொள்ள மறுத்ததையடுத்து யுவதி, வனாத்தவில்லு பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
பின்னர் போலீசார் இந்த நபரை அழைத்து புகாரை விசாரிக்கத் தொடங்கினர், அங்கு அவர் குழந்தையை மட்டுமே ஏற்றுக்கொள்ள விரும்புவதாகக் கூறினார்.
மேலும், கள்ளக்காதலியும், அவரது உறவினர்களும் தன்னை இஸ்லாம் மதத்துக்கு மாறி, திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியதாகவும் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், இரு தரப்பினரும் முன்வைத்த பல்வேறு கருத்துக்களால் சம்பவத்தை சமரசம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக வண்ணாத்திவில்லு பொலிஸார் தெரிவித்தனர்.
இதனால், இந்த விடயத்தை நீதிமன்றத்தில் பாரப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.