நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை கதை ஏற்கெனவே இந்தி, மலையாள மொழிகளில் திரைப்படமாக உருவாகி இருந்தாலும் மேலும் ஒரு திரைப்படம் உருவாகிறது. ‘சில்க் ஸ்மிதா -தி அன்டோல்ட் ஸ்டோரி’ என்ற தலைப்பில் உருவாகும் இந்தப் படத்தை எஸ்.பி.விஜய் தயாரிக்கிறார்.
ஜெயராம் இயக்கும் இந்தப் படத்தில் சில்க் ஸ்மிதாவாக, நடிகை சந்திரிகா ரவி நடிக்கிறார். இவர் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தில் பேயாக நடித்திருந்தார். நகுலின் ‘செய்’ படத்திலும் நடித்துள்ளார்.
சில்க் ஸ்மிதா வாழ்க்கை கதை, தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என 5 மொழிகளில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இந்தப் படத்தின் முதல் தோற்ற போஸ்டரை படக்குழு, நடிகை சில்க் ஸ்மிதாவின் பிறந்த நாளான நேற்று வெளியிட்டுள்ளது
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1