Pagetamil
முக்கியச் செய்திகள்

இலங்கை தமிழ் அரசு கட்சி தலைமை பதவிக்கான வேட்புமனுக்களை சமர்ப்பித்தனர் சி.சிறிதரன், எம்.ஏ.சுமந்திரன்!

இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைமைப் பதவிக்காக போட்டியிடுவதற்கன வேட்புமனுக்களை நாடாளுமன்ற உறுப்பினர்கள் சி.சிறிதரன், எம்..ஏ.சுமந்திரன் ஆகியோர் தாக்கல் செய்துள்ளனர்.

இலங்கை தமிழ் அரசு கட்சியின் தேசிய மாநாடு எதிர்வரும் 2024 ஜனவரி மாதம் நடைபெறவுள்ளது. இதன்போது புதிய தலைவர் தெரிவு இடம்பெறும்.

ஜனவரி 20ஆம் திகதி மத்திய செயற்குழு கூடி புதிய தலைவரை தெரிவு செய்வதென்றும், அன்று, ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் போட்டியிட்டு, தலைவரை ஏகமனதாக தெரிவு செய்ய முடியாமல் போனால், 21ஆம் திகதி பொதுக்குழு கூட்டத்தில் தலைவரை தெரிவு செய்வதென்றும், 28ஆம் திகதி புதிய தலைவர் உரையாற்றுவார் என்றும் கட்சியின் மத்தியகுழு கூட்டத்தில், கடந்த நவம்பர் 5ஆம் திகதி வவுனியவில் நடந்த கட்சியின் மத்தியகுழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், கட்சியின் தலைமைப்பதவிக்கு போட்டியிடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட சி.சிறிதரன், எம்.ஏ.சுமந்திரன் ஆகிய இருவரும் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

கட்சியின் செயலாளரிடம் இருவரும் தமது வேட்புமனுக்களை சமர்ப்பித்துள்ளனர்.

நேற்று முன்தினம் (28) சிறிதரன் வேட்புமனுவை சமர்ப்பித்தார். நேற்று எம்.ஏ.சுமந்திரன் வேட்புமனுவை சமர்ப்பித்தார்.

இலங்கை தமிழ் அரசு கட்சியின் வரலாற்றில் தலைமை பதவிக்கு வாக்கெடுப்பு நடத்தப்பட்ட வரலாறில்லை. இதுவரை ஏகமனதாகவே தலைவர் தெரிவு செய்யப்பட்டு வந்தார். ஒன்றுக்கு மேற்பட்ட போட்டியாளர்கள் களத்திலிருந்தால், பொருத்தமான ஒருவருக்கு விட்டுக்கொடுத்து ஏனையவர்கள் ஒதுங்கிக் கொள்ளும் அரசியல் பாரம்பரியத்தை தமிழ் அரசு கட்சி பேணி வந்தது. எனினும், அந்த வழக்கம் இம்முறை இல்லாமல் போவதற்கான வாய்ப்புக்களே உள்ளன.

தற்போதைய நிலவரப்படி, கட்சிக்குள் தலைமை பதவிக்கான வாக்கெடுப்பு நடந்தால், எம்.ஏ.சுமந்திரனுக்கு வெற்றி வாய்ப்புக்கள் அதிகமுள்ளதாக கருதப்படுகிறது.

இதையும் படியுங்கள்

முன்னர் ஒன்றாக வந்தீர்கள்… இப்போது மூன்றாக வந்துள்ளீர்கள்; தமிழர்களுக்கிடையிலானதே மீனவர் பிரச்சினை: மோடி- தமிழ் கட்சிகள் சந்திப்பில் பேசப்பட்டவை!

Pagetamil

இலங்கை- இந்தியாவுக்கிடையில் 7 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!

Pagetamil

நரேந்திர மோடிக்கு பெரும் வரவேற்பு!

Pagetamil

‘என் மனைவியை தொட்டால்…’: ஜனாதிபதி அனுரவை எச்சரித்த மஹிந்தவின் சகா!

Pagetamil

Update: புதிய வாகன பதிவுகளுக்கு மட்டுமே வரி அடையாள எண் தேவை!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!