25.1 C
Jaffna
January 19, 2025
Pagetamil
இலங்கை

கல்வியங்காட்டில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய உணவகத்திற்கு சீல்!

யாழ் மாநகரசபையின் நல்லூர் பிரிவு பொது சுகாதார பரிசோதகர் பு. ஆறுமுகதாசன் தலைமையிலான குழுவினரால் கல்வியங்காட்டு பகுதியில் அமைந்துள்ள உணவகம் திடீர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

இதன்போது பல சுகாதார சீர்கேட்டு குறைபாடுகள் இனங் காணப்பட்டது. ஏற்கனவே பல தடவைகள் அறிவுறுத்தப்பட்ட நிலையிலும் தொடர்ந்து சுகாதார சீர்கேட்டுடனேயே குறித்த உணவகம் இயங்கி வந்தமை அவதானிக்கப்பட்டது. அத்துடன்உணவகத்தில் திகதி காலாவதியான உணவு பொருட்களும் பொது சுகாதார பரிசோதகர்களால் கைப்பற்றப்பட்டது.

இதனையடுத்து உணவக உரிமையாளரிற்கு எதிராக நீதிமன்றில் இன்று புதன்கிழமை பொது சுகாதார பரிசோதகர் பு. ஆறுமுகதாசன் இனால் சுகாதார சீர்கேடு, காலாவதியான உணவு பொருட்கள் வைத்திருந்தமை என்பவற்றிற்கு தனித்தனியே வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டது.

வழக்கினை விசாரித்த நீதவான் குறைபாடுகள் நிவர்த்தி செய்யும்வரை உணவகத்தினை சீல் வைத்து மூடுமாறு பொது சுகாதார பரிசோதகரிற்கு கட்டளை வழங்கினார். இதனையடுத்து பொது சுகாதார பரிசோதகர் பு. ஆறுமுகதாசனினால் உணவகம் சீல் வைத்து மூடப்பட்டது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

யாழில் சுழல் காற்றால் 48 குடும்பங்கள் பாதிப்பு

Pagetamil

விசாரணையின் பெயரில் அழைத்துச் செல்லப்பட்டவர் உயிரிழப்பு

east tamil

Update: மன்னார் துப்பாக்கி சூட்டு சம்பவம்

east tamil

அறுவடை காலத்தில் பெய்யும் மழையால் அழிவடைந்தது வயல்கள்

Pagetamil

மூத்த பத்திரிகையாளர் விக்டர் ஐவன் காலமானார்!

Pagetamil

Leave a Comment