24.8 C
Jaffna
January 31, 2025
Pagetamil
இலங்கை

செப்டெம்பரில் 16 வயதுக்குட்பட்ட 22 சிறுமிகள் கர்ப்பம்!

2021ஆம் ஆண்டுக்காக முன்வைக்கப்பட்டுள்ள ஒதுக்கீட்டுச் சட்டமூலம் தொடர்பிலும் இந்நாட்டில் தயாரிக்கப்பட வேண்டிய கொள்கை தொடர்பில் யோசனைகள் மற்றும் முன்மொழிவுகளைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் ஜனநாயகத்துக்கான வெஸ்மின்ஸ்டர் மன்றம் (WFD) உள்ளடங்கலாக இந்நாட்டின் சிவில் சமூகப் பிரதிநிதிகளுடன் அரசாங்க நிதி பற்றிய குழுவின் விசேட கலந்துரையாடல் 2023.11.21 ஆம் திகதி பாராளுமன்றத்தில் நடைபெற்றது. குறித்த குழுவின் தலைவர் கலாநிதி ஹர்ஷ.த சில்வா தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது.

ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் முன்மொழிவுகளில் குறைவாகக் கவனம் செலுத்தப்பட்ட பல பகுதிகள் குறித்து சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியதுடன், இது தொடர்பில் கவனம் செலுத்துவதன் அவசியம் வலியுறுத்தப்பட்டது. பெண்களின் நலனில் கவனம் செலுத்தாததால் ஏற்படும் பிரச்னைகள் குறித்து குழுவிடம் எடுத்துரைத்தனர். பாடசாலை மாணவியர் எதிர்கொள்ளம் சுகாதாரப் பிரச்சினை உள்ளிட்ட விடயங்கள் குறித்தும் இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

இதன்படி, சுகாதார வசதிகள் உள்ளிட்ட ஏனைய வசதிகள் தேவைப்படும் பாடசாலை மாணவிகளின் எண்ணிக்கையைக் கண்டறிந்து அவர்களுக்குத் தேவையான வசதிகளை வழங்குவதற்கான கட்டமைப்பைத் தயாரிப்பது தொடர்பிலும் அரசாங்க நிதி பற்றிய குழுக் கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டது.

இந்த ஆண்டு செப்டெம்பர் மாதத்தில் 168 சிறுவர் பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும், 16 வயதுக்குட்பட்ட 22 சிறுமிகள் கர்ப்பமடைந்துள்ளதாகவும் குழுவில் தெரியவந்தது. அதனடிப்படையில், குழந்தைகளுக்கான பாலியல் கல்வியை வழங்குவதற்கான முறையான வேலைத்திட்டத்தை உருவாக்குவது மிகவும் அவசரமான தேவை எனச் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டினர்.

இந்நாட்டில் முதியோர் பராமரிப்புக்கான விசேட திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு புதிய கொள்கைகள் வகுக்கப்பட வேண்டுமெனவும் குழுவில் விரிவாக ஆராயப்பட்டது. உளநல மேம்பாடு தொடர்பான பழமையான சட்டத்தில் திருத்தம் செய்து காலத்துக்கு ஏற்ற வகையில் அதனை மறுசீரமைக்க வேண்டியதன் அவசியத்தையும் குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார்.

What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

விடைபெற்றுச்செல்லும் மாவை அண்ணைக்கு அஞ்சலி மரியாதை!

Pagetamil

மாவையின் மறைவுக்கு ஹிஸ்புல்லாஹ் இரங்கல்

Pagetamil

மாவையின் புகழுடலுக்கு தமிழரசு பதில் தலைவர் சீ.வீ.கே அஞ்சலி

Pagetamil

ஹெரோயினுடன் கைதான இருவர் பொலிஸாரிடமிருந்து தப்பியோட்டம்

east tamil

அரிசி இறக்குமதியை நிறுத்த அரசாங்கம் முடிவு

east tamil

Leave a Comment