எமிரேட்ஸ் கிரிக்கெட் வாரியத்தின் ஊழல் தடுப்பு சட்டத்தை மீறிய குற்றத்திற்காக மேற்கிந்தியத் தீவுகளின் முன்னாள் துடுப்பாட்ட வீரர் மார்லன் சாமுவேல்ஸ் அனைத்து கிரிக்கெட்டிலும் இருந்து 6 ஆண்டுகள் தடை செய்யப்பட்டுள்ளார்.
2021 செப்டம்பரில் மொத்தம் நான்கு குற்றச்சாட்டுகளில் சாமுவேல்ஸ் மீது – ECB சட்டத்தின் கீழ் நியமிக்கப்பட்ட ஊழல் எதிர்ப்பு அதிகாரி என்ற தகுதியில் ICC-யால் குற்றம் சாட்டப்பட்டது, பின்னர் இந்த ஆண்டு ஓகஸ்டில் குற்றச்சாட்டுக்கள்ளில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டது.
ஆறு வருட தடை வியாழன் அன்று ICC ஆல் உறுதி செய்யப்பட்டது. நவம்பர் 11 2023 முதல் தடை தொடங்கும்.
ஊழல் எதிர்ப்பு அதிகாரியுடன் ஒத்துழைக்க தவறியது, 750 டொலர் அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்புள்ள விருந்தோம்பலின் அதிகாரபூர்வ ரசீதை, ஊழல் எதிர்ப்பு அதிகாரியிடம் வெளிப்படுத்தத் தவறியது உள்ளிட்ட4 குற்றச்சாட்டுகளில் சாமுவேல்ஸ் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
ஐசிசி மனிதவள மற்றும் ஒருமைப்பாடு பிரிவுக்கு தலைமை தாங்கும் அலெக்ஸ் மார்ஷல் வியாழக்கிழமை தடையை அறிவித்தார்.
“சாமுவேல்ஸ் இரண்டு தசாப்தங்களாக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடினார், அதன் போது அவர் பல ஊழல் எதிர்ப்பு அமர்வுகளில் பங்கேற்றார் மற்றும் ஊழல் எதிர்ப்பு சட்டங்களின் கீழ் அவரது கடமைகள் என்ன என்பதை சரியாக அறிந்திருந்தார்” என்று மார்ஷல் கூறினார்.
“அவர் இப்போது ஓய்வு பெற்றிருந்தாலும், குற்றங்கள் நடந்தபோது சாமுவேல்ஸ் ஒரு பங்கேற்பாளராக இருந்தார். விதிகளை மீற விரும்பும் எந்தவொரு பங்கேற்பாளருக்கும் ஆறு ஆண்டு தடை ஒரு வலுவான தடையாக செயல்படும்“ என்றார்.
சாமுவேல்ஸ் மேற்கிந்தியத் தீவுகளுக்காக 18 வருட காலப்பகுதியில் 300 க்கும் மேற்பட்ட போட்டிகளில் விளையாடினார், மொத்தம் 17 சதங்களை அடித்தார். கரீபியன் அணிக்கு ஒருநாள் அணிக்கு கப்டனாகவும் இருந்தார்.