காசல்ரீ நீர்த்தேக்கத்திலிருந்து நீர் வெளியேற்றப்பட ஆரம்பித்துள்ளததால் களனி ஆற்றின் நீர்மட்டமும் உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று நள்ளிரவு முதல் பெய்து வரும் அடை மழையினால் காசல்ரீ நீர்மட்டம் நிரம்பி வான் பாய ஆரம்பித்துள்ளதாக நீர்த்தேக்கத்திற்கு பொறுப்பான பொறியியலாளர்கள் தெரிவித்தார்.
முக்கியமாக நீர் மின் உற்பத்திக்கு நீர் வழங்கும் காசல்ரி நீர்த்தேக்கத்தில் 13 கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அந்த நீர்த்தேக்கம்த்திலிருந்து நீர் வெளியேற்றப்படுவதுடன், அதற்கு கீழே அமைந்துள்ள விமலசுரேந்திர நீர்த்தேக்கத்திலிருந்தும் நள்ளிரவு முதல் நீர் வெளியேற்றப்பட்டு வருவதாகவும், இரண்டு நீர்த்தேக்கங்கங்களிலிருந்தும் நீர் வெளியேற்றப்படுவதால் களனி ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மவுஸ்ஸாக்கலை நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 03 அடியை எட்டியுள்ளதோடு, இரண்டு நீர்த்தேக்கங்களின் நீர்மட்டமும் அதிகரித்துள்ளதையடுத்து, விமலசுரேந்திர, கனியன், லக்ஷபான, நியூ லக்ஷபான, பொல்பிட்டிய ஆகிய நீர்மின் நிலையங்கள் அதிகபட்ச திறனில் உற்பத்தி செய்யப்படுகிறது.
இதேவேளை, அடை மழை காரணமாக எப்பாவல நகரமே நீரில் மூழ்கியுள்ளது.