வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் சித்திரவதைக்குட்படுத்தப்ட்டு உயிரிழந்த சித்தன்கேணி இளைஞனின் சடலத்துடன் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வட்டுக்கோட்டைப் பொலிஸாரால் கடந்த 08 ஆம் திகதி சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்டு, யாழ்ப்பாணச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த, கலைவாணி வீதி, சித்தன்கேணி, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நாகராசா அலெக்ஸ் என்னும் 26 வயது இளைஞன் பொலிஸாரின் தாக்குதலால் சிறுநீரகப் பாதிப்பு ஏற்பட்ட நிலையில் 19 ஆம் திகதி உயிரிழந்தார்.
இன்று சித்தன்கேணி சந்தி பகுதியில் உயிரிழந்த இளைஞனின் சடத்துடன் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
1
+1