யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவனை கன்னத்தில் அறைந்தார் என்ற குற்றச்சாட்டில் கைதான வகுப்பாசிரியர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
யாழ் புறநகர் பகுதியிலுள்ள பாடசாலையொன்றில் கல்வி கற்கும், 14 வயதான மாணவனே தாக்கப்பட்டதாக முறையிடப்பட்டுள்ளது.
மாணவன் பாடசாலைக்கு வரவில்லையென்பதால், நேற்று வகுப்பாசிரியர் கன்னத்தில் அறைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பாக மாணவன் தனது பெற்றோருடன் இன்று (18) யாழ்.பொலிஸ் நிலையத்திற்கு வந்து முறைப்பாடு செய்ததுடன், யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தற்போது வார்டு இலக்கம் 17ல் வசிப்பிடமாக சிகிச்சை பெற்று வருகிறார்.
இச்சம்பவம் தொடர்பாக மேற்படி ஆசிரியர் யாழ்.பொலிஸாரால் ன்று 12.30 மணியளவில் கைது செய்யப்பட்டு யாழ். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் சொந்த பிணையில் விடுவிக்கப்பட்டார்
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1