நாட்டை விட்டு தப்பிச் செல்ல திட்டமிட்டதாக குற்றம் சாட்டப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிளின் தாயாரை எதிர்வரும் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோட்டை நீதவான் திலின கமகே இன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
திருகோணமலை பகுதியைச் சேர்ந்த ரஞ்சனி சந்திரலதா என்ற பெண்ணே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த பெண் சம்பவம் இடம்பெறுவதற்கு முந்தைய நாள் கொழும்புக்கு வந்திருந்தமை தெரியவந்துள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.
சந்தேக நபரான பெண்ணுக்கு “ஹரக் கட்டா” வழங்கிய கையடக்கத் தொலைபேசிகள், கணனிகள் மற்றும் ஏனைய பொருட்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.
சந்தேகத்திற்கிடமான பெண் சுகயீனமுற்றிருப்பதால் அவரை பிணையில் விடுவிக்குமாறு சட்டத்தரணிகள் முன்வைத்த கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.