Pagetamil
மலையகம்

தைப்பூச பகையால் தலவாக்கலையில் இளைஞன் கொலை

முச்சக்கரவண்டியில் பயணித்த இரு இளைஞர்கள் மீது மற்றுமொரு முச்சக்கர வண்டியில் வந்த சிலர் கூரிய ஆயுதங்களால் தாக்கியதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தலவாக்கலை ஹெலிரூட் தேயிலை தொழிற்சாலைக்கு அருகில் நேற்று (13) பிற்பகல் இடம்பெற்ற தாக்குதலில் படுகாயமடைந்த இரு இளைஞர்கள் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் 22 வயதுடைய சிவஞானம் சஜீவன் என்பவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இத்தாக்குதலில் காயமடைந்தவர் அவருடைய சகோதரன் என்பதுடன் மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

தலவாக்கலை கிரேட் வெஸ்டர்ன் பிரதேசத்தின் வட்டகொட பிரதேசத்தைச் சேர்ந்த இரு குழுக்களுக்கிடையில் நீண்டகாலமாக நிலவி வந்த பகைமை காரணமாக இந்த மோதல் இடம்பெற்றுள்ளதாக தலவாக்கலை பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னர் தலவாக்கலை நகரில் இடம்பெற்ற தைப்பூச திருவிழாவின் போது இரு பிரிவினரும் முதன் முதலாக மோதலில் ஈடுபட்டு மரச் சக்கர வாகனத்தை தாக்கி சேதப்படுத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொலை மற்றும் மோதலுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் இரு தரப்பையும் சேர்ந்த ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களில் மூவர் தற்போது நுவரெலியா பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்கள் 21, 23 மற்றும் 24 வயதுடையவர்கள்.

சடலம் லிந்துலை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், நீதவான் விசாரணைகளும் பிரேத பரிசோதனைகளும் இடம்பெறவுள்ளன.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கந்தபொல மற்றும் மகஸ்தோட்டையில் 500 குடும்பங்களுக்கு நிவாரணம்

east tamil

2 சிறுத்தைக் குட்டிகள் மீட்பு!

Pagetamil

போலி நாணயத்தாள்களுடன் கைதான பாடசாலை மாணவர்கள்

Pagetamil

நானுஓயாவில் வீதியைவிட்டு விலகிய லொறி மண்மேட்டில் மோதி விபத்து

east tamil

ஹட்டனில் பஸ் விபத்தில் 3 பேர் பலி

east tamil

Leave a Comment