28.1 C
Jaffna
January 31, 2025
Pagetamil
விளையாட்டு

ODI WC 2023: அரை இறுதியில் இந்தியா – நியூஸிலாந்து பலப்பரீட்சை

உலகக் கோப்பை தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் நடைமுறைக்கு சாத்தியம் இல்லாத வகையில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை பாகிஸ்தான் அணியால் எட்ட முடியாததால் அந்த அணி தனது இன்னிங்ஸை நிறைவு செய்வதற்கு முன்னரே அரை இறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது. இதைத் தொடர்ந்து கடைசி அணியாக நியூஸிலாந்து அரை இறுதி சுற்றில் நுழைந்தது. அந்த அணி 10 புள்ளிகளுடன் நிகர ரன் ரேட்டை 0.743 ஆக வைத்திருந்தது சாதகமாக அமைந்தது.

ஏற்கெனவே இந்தியா, தென்னாபிரிக்கா, அவுஸ்திரேலியா ஆகிய அணிகள் அரை இறுதியில் கால்பதித்த நிலையில் தற்போது நியூஸிலாந்தும் இணைந்துள்ளது. வரும் 15ஆம் திகதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் முதல் அரை இறுதி ஆட்டத்தில் இந்தியா – நியூஸிலாந்து அணிகள் மோதுகின்றன. 16ஆம் திகதி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் 2 வது அரை இறுதி ஆட்டத்தில் தென்னாபிரிக்கா – அவுஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

அரை இறுதியில் வெற்றி பெறும் அணிகள் சாம்பியன் கோப்பை யாருக்கு என்பதை தீர்மானிக்கும் இறுதிப் போட்டியில் 19ஆம் திகதி மல்லுக்கட்டும். இந்த ஆட்டம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

புரட்டியெடுக்கும் அவுஸ்திரேலியா: காலியில் கதிகலங்கி நிற்கும் இலங்கை!

Pagetamil

அவுஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம்: இத்தாலி வீரர் ஜன்னிக் சின்னர் சம்பியன்

Pagetamil

என் மகளுக்கு நிச்சயதார்த்தம் நடக்கவில்லை!

Pagetamil

`இளம் எம்.பி -யைக் கரம் பிடிக்கும் ரிங்கு சிங்’; யார் இந்த பிரியா சரோஜ்?

Pagetamil

‘உங்களை விட என் மகன் சிறந்த வீரர்’ – கபில் தேவுக்கு ‘பேப்பர் கட்டிங்’ அனுப்பிய யோக்ராஜ் சிங்

Pagetamil

Leave a Comment