24.8 C
Jaffna
January 31, 2025
Pagetamil
இலங்கை

நாளை வரவு செலவு திட்டத்தை தாக்கல் செய்யும் ரணில்

அடுத்த ஆண்டுக்கான (2024) ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (வரவு செலவுத் திட்ட உரை) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நாளை (13) நண்பகல் 12.00 மணிக்கு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

ஜனாதிபதி நிதி அமைச்சராக வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்கிறார்.

வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நாளை மறுநாள் (14) ஆரம்பமாகவுள்ளது. எதிர்வரும் 21ஆம் திகதி வரை ஏழு நாட்களுக்கு (ஞாயிறு தவிர்ந்த) விவாதம் நடைபெறும் என நாடாளுமன்றத்தின் பொதுச் செயலாளர் குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.

வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இம்மாதம் 21ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை 6.00 மணிக்கு நடைபெறவுள்ளது.

இம்மாதம் 22ஆம் திகதி புதன்கிழமை முதல் அடுத்த மாதம் 13ஆம் திகதி புதன்கிழமை வரை (ஞாயிறு நீங்கலாக) 19 நாட்களுக்கு பட்ஜெட் குழுநிலை விவாதம் நடத்தவும் நாடாளுமன்ற விவகாரக் குழு முடிவு செய்தது.

வரவு செலவுத்திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு (இறுதி வாக்கெடுப்பு) அடுத்த மாதம் 13ஆம் திகதி புதன்கிழமை மாலை 6.00 மணிக்கு நடைபெறவுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

இன்றைய வானிலை

Pagetamil

காலியில் துப்பாக்கிச் சூடு: மூவர் பலி!

east tamil

விடைபெற்றுச்செல்லும் மாவை அண்ணைக்கு அஞ்சலி மரியாதை!

Pagetamil

மாவையின் மறைவுக்கு ஹிஸ்புல்லாஹ் இரங்கல்

Pagetamil

மாவையின் புகழுடலுக்கு தமிழரசு பதில் தலைவர் சீ.வீ.கே அஞ்சலி

Pagetamil

Leave a Comment