24.9 C
Jaffna
January 15, 2025
Pagetamil
இலங்கை

இலங்கை கிரிக்கெட் வீழ்ச்சிக்கு மூத்த வீரர்கள் சாதனைகளுக்காக விளையாடியதும் ஒரு காரணம்: சாணக்கியன் எம்.பி

இலங்கை கிரிக்கெட்டின் நிலை, நாட்டின் நிலை இரண்டும் ஒன்றே என இலங்கை தமிழ் அரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட உறுப்பினர் சாணக்கியன் இராசபுத்திரன் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

நாடு அழிந்த பின்னர், கிரிக்கெட் அழிந்த பின்னர், அழிலுக்குக் காரணமானவர்கள் இவ்வாறு பேசுவது கேலிக்கூத்தானது என  தெரிவித்தார்.

கிரிக்கெட் நிறுவனம் தொடர்பான விவாதத்தில் மேலும் கருத்து தெரிவித்த அவர்-

நீண்ட காலத்திற்கு முன்பே அமைச்சர் இந்த முடிவை எடுத்திருக்க வேண்டும். கிரிக்கெட் மீதான மரியாதையை இலங்கை இழந்ததை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவராக ஷம்மி டி சில்வா இருந்த போது நாமல் ராஜபக்ச விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்தார். கிரிக்கெட் நிறுவனங்களில் அதே பெயர்கள் எப்படி மாறிவருகின்றன என்பதைப் பார்க்கிறோம்.

இந்த தோல்விகளுக்கு தற்போது ஓய்வு பெற்ற மூத்த வீரர்களும் பொறுப்பேற்க வேண்டும். இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்காமல் தங்கள் சாதனைகளுக்காக விளையாடினர். மூத்த வீரர்கள் ஒரேயடியாக வெளியேறும் போது இளம் வீரர்களுக்கு ஒன்றும் செய்ய முடியாது.எனவே. , இதற்கான பொறுப்பை நாம் கூட்டாக ஏற்க வேண்டும்.

மாவட்ட அளவில் கூட கிரிக்கெட் தொடர்பான அதிகாரிகள் தான் உள்ளனர்.எல்லாவற்றையும் இழந்த பின், இந்த மாற்றங்களை செய்ய முயற்சிக்கின்றனர்.

தொலைதூர மாவட்டங்களில் லெதர் பந்தைத் தொடாத திறமையான பிள்ளைகள் உள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

இரத்தினக் கற்களை கடத்த முயன்ற சீன தந்தை, மகன் கைது

east tamil

சீன ஜனாதிபதியை சந்திக்கும் அனுர

east tamil

பயிர் சேதத்திற்கு மாத இறுதியில் இழப்பீடு

east tamil

போயா தினத்தில் மதுபான விற்பனை – ஒருவர் கைது

east tamil

அடுத்த மாதம் முதல் புதிய அடையாள அட்டைகள் டிஜிட்டல் வடிவில்

east tamil

Leave a Comment