ஹொங்கொங்கில், அமெரிக்க நிறுவனமான பிட்ஸா ஹட் அறிமுகப்படுத்தியுள்ள பாம்பு பீட்சா வைரலாகி வருகிறது.
மத்திய ஹொங்கொங்கில் ஒரு நூற்றாண்டுக்கும் (1895) அதிக பழமையான பாம்பு உணவகமான Ser Wong Fun உடன் இணைந்து, அமெரிக்க நிறுவனமான பிஸ்ஸா ஹட் இந்த உணவை தயாரித்துள்ளது.
ஹொங்கொங், தெற்கு சீனா மற்றும் வியட்நாம் மற்றும் தாய்லாந்து போன்ற தென்கிழக்கு ஆசியாவின் பிற பகுதிகளில் பிரபலமான ஒரு பாரம்பரிய பாம்பு சூப் உணவின் நவீன வடிவமாக பாம்பு பீட்சா தயாரிக்கப்பட்டுள்ளது.
இது துண்டாக்கப்பட்ட பாம்பு இறைச்சி, கருப்பு காளான்கள் மற்றும் சீன உலர்ந்த ஹாம்கள் ஆகியவற்றின் மூலம் தயாரிக்கப்படுகிறது. இவை அனைத்தும் ஹொங்கொங்கின் பிரபலமான உண்மையான பாம்பு உணவுகளில் தவிர்க்க முடியாத பொருட்கள்.
பாம்பு பீட்சாவில் சீன எலி பாம்புகள், கிரேட்கள் மற்றும் வெள்ளை பட்டை பாம்புகள் உட்பட பல இனங்களின் இறைச்சிகள் பயன்படுத்தப்படும்.
மார்க்கெட்டிங் தந்திரத்தின் ஒரு பகுதியாக இருக்கும் பீட்சாவில், ஒருவகை கடலுணவான அபலோன் சேஸுடன் கூடிய 9 அங்குல பீட்சா ஆகும். இது நவம்பர் 22 வரை விற்பனைக்கு இருக்கும்.
உணவிலும், பீட்சாவிலும் பாம்பு இறைச்சி பயன்படுத்தப்படுவது பல பகுதிகளில் வழக்கம் என்றாலும், இம்முறை தயாரிக்கப்பட்டுள்ள பாம்பு பீட்சாவின் வடிவம் கவனத்தை ஈர்க்கிறது. பல ஆசிய நாடுகளில் நீண்ட காலமாக பாம்பு இறைச்சி தவிர்க்க முடியாத உணவாக உள்ளது. அது ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
தமது பாம்பு பீட்சாவை விளம்பரப்படுத்திய ஹொங்கொங் பீட்சா ஹட், “சீஸ் மற்றும் துண்டுகளாக்கப்பட்ட கோழியுடன் இணைந்த, பாம்பு இறைச்சி சுவையில் செழுமையாக மாறும்.” என தெரிவித்துள்ளது.
“பீட்சாவுடன் இணைந்து, ஒருவரின் சுவை மொட்டுகளுக்கு சவால் விடும் போது நல்ல ஆரோக்கியத்தைப் பேணுவது என்றால் என்ன என்ற வழக்கமான கருத்தாக்கத்திலிருந்து ஒரு முன்னேற்றத்தைக் குறிக்கிறது,” என்று அது கூறியது. பாம்ப இறைச்சியில் இரத்த ஓட்டம் அதிகரிப்பது போன்ற ஆரோக்கிய நன்மைகள் உள்ளதாக நீண்டகாலமாக கூறப்படுகிறது.