கோபி நயினார் இயக்கும் புதிய படமான ‘கருப்பர் நகரம்’ படத்தின் டைட்டில் அறிவிப்பை இயக்குநர் வெங்கட்பிரபு வெளியிட்டுள்ளார்.
கடந்த 2017ஆம் ஆண்டு நயன்தாரா நடிப்பில் வெளியான ‘அறம்’ படத்தின் மூலம் கவனம் பெற்றவர் இயக்குநர் கோபி நயினார். இந்தப் படத்தை தொடர்ந்து அவர் நடிகை ஆன்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘மனுஷி’ படத்தை இயக்கினார். இந்தப் படத்தை வெற்றிமாறனின் க்ராஸ் ரூட் நிறுவனம் தயாரித்திருந்தது. இதன் முதல் தோற்றம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியானது. ஆனால், அதன்பிறகு படம் குறித்து அப்டேட் எதுவும் வெளியாகவில்லை.
இந்நிலையில், கோபி நயினாரின் இயக்கத்தில் அடுத்ததாக உருவாகும் படத்தில் ஜெய், ஐஸ்வர்யா ராஜேஷ், ஜேடி சக்ரவர்த்தி ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
படத்துக்கு ‘கருப்பர் நகரம்’ என தலைப்பிடப்பட்டுள்ளது. படத்தின் டைட்டில் அறிவிப்பு போஸ்டரை இயக்குநர் வெங்கட் பிரபு தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
நடிகர் ஜெய் நடிப்பில் உருவாகியுள்ள ‘லேபில்’ வெப்சீரிஸ் வரும் நவம்பர் 10ஆம் திகதி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.