25.8 C
Jaffna
December 13, 2024
Pagetamil
முக்கியச் செய்திகள்

‘இலங்கை கிரிக்கெட் இடைக்கால குழுவை கலைக்க ஜனாதிபதி அழுத்தம் தந்தார்:’ அமைச்சர் ரொஷான் ரணசிங்க பகிரங்க குற்றச்சாட்டு!

இலங்கை கிரிக்கெட்டுக்காக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இடைக்கால குழுவை திரும்பப் பெறுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தமக்கு அறிவித்ததாக விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க குற்றம் சுமத்தியுள்ளார்.

இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் ரணசிங்க, இடைக்கால குழுவை வாபஸ் பெறாவிட்டால் விளையாட்டு சட்டத்தை தாம் பொறுப்பேற்கவுள்ளதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாக தெரிவித்தார்.

அதற்கு பதிலளித்த அமைச்சர் ரணசிங்க, தன்னை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு தாம் விரும்பிய தீர்மானத்தை எடுக்குமாறு ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளதாக தெரிவித்தார்.

“இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தின் ஊழலின் அளவு நம்பிக்கைக்கு அப்பாற்பட்டது என்பதால், இடைக்காலக் குழுவை எந்தக் கட்டத்திலும் இடைநிறுத்தப் போவதில்லை என்று நான் ஜனாதிபதியிடம் தெரிவித்தேன்,” என்று அவர் கூறினார்.

டிசம்பரில் திட்டமிடப்பட்ட உத்தேச இலங்கை ரி10 போட்டியும் ஊழல் நிறைந்தது என்று விளையாட்டு அமைச்சர் மேலும் கூறினார்.

“இலங்கை கிரிக்கெட் கொள்ளையர்களால் நடத்தப்படுகிறது. எனவே, இடைக்கால குழுவை நீக்க மாட்டேன். இடைக்கால குழுவுக்கு தடை உத்தரவு பிறப்பிக்க நீதித்துறை முடிவு செய்திருப்பது நலன்களுக்கு எதிரானது” என்றும் அவர் கூறினார்.

கிரிக்கெட் நிர்வாகத்தின் நிதி முறைகேடுகளை நிரூபிப்பதற்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையின் அடிப்படையில் இலங்கை கிரிக்கெட் அணிக்கு இடைக்கால குழுவொன்றை நியமிக்கும் தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

“கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை பொலிஸ் மா அதிபரிடம்  ஒப்படைக்கப்பட்டு இரண்டு மாதங்கள் ஆகின்றன, ஆனால் இன்னும் விசாரணை தொடங்கப்படவில்லை. மறுபுறம் சட்டமா அதிபர் என்னை சட்ட நடவடிக்கையை முன்னெடுப்பதற்கு வேறு ஒரு இடைக்கால குழுவை நியமிக்க வேண்டும் என்று விரும்புகிறார்” என்று அவர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இலங்கை கிரிக்கெட் அணியின் தற்போதைய நிலை மற்றும் அது தொடர்பான விடயங்கள் தொடர்பில் நாளை பாராளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை வெளியிட உள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

தாம் நியமித்த இலங்கை கிரிக்கெட் சபைக்கான இடைக்கால குழுவின் செயற்பாடுகளை இடைநிறுத்தி இன்று நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு தொடர்பில் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

சபாநாயகர் இராஜினாமா!

Pagetamil

ஜனாதிபதி அனுரவின் இந்திய பயண விபரம்!

Pagetamil

யாழில் தொடர் உயிரிழப்புக்களுக்கு எலிக்காய்ச்சலே காரணம்: பரிசோதனையில் உறுதியானது!

Pagetamil

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் தலைவர்கள் ஒதுங்கி, புதியவர்களுக்கு வழிவிட யோசனை: புதிய அணிகள் இணைய பேச்சு!

Pagetamil

சிரியா முன்னாள் ஜனாதிபதி அசாத் பற்றிய மர்மம் விலகியது: ரஷ்யா புகலிடம் அளித்துள்ளது!

Pagetamil

Leave a Comment