29.3 C
Jaffna
March 5, 2025
Pagetamil
இலங்கை

யாழில் வீதியில் தனிமையில் சென்ற மாணவிக்கு ஆணுறுப்பை காண்பித்த காமக்கொடூரன்

தனிமையில் வீதியில் செல்லும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவியிடம் ஆணுறுப்பை காட்டி பாலியல் சேஷ்டையில் ஈடுபடும் ஒருவரின் காணொளி வெளியாகியுள்ளது.

இது தொடர்பில் பல்கலைக்கழக மாணவி ஒருவரால் எடுக்கப்பட்ட காணொளியொன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆத்திசூடி வீதியில் மோட்டார் சைக்கிளில் ஆணுறுப்பை காட்டியவாறு பல்கலைக்கழக மாணவியை பின்தொடர்ந்த ஒருவரை பல்கலைக்கழக மாணவி துணிகரமாக காணொளி பதிவு செய்துள்ளார்.

காணொளி எடுக்கப்படுவதை அவதானித்த குறித்த நபர் மோட்டார் சைக்கிளை திருப்பி கொண்டு செல்வதை காணொளியில் அவதானிக்க முடிகின்றது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவிகள் விரிவுரைகளை முடித்துவிட்டு பல்கலைக்கழக விடுதிகளுக்கும் தங்குமிடத்துக்கும் நடந்து செல்லும் போதும் வரும் போதும் வீதியால் வருகின்ற ஒரு சிலர் ஆணுறுப்பை காட்டி பாலியல் சைகைகளை செய்கின்ற போக்கு அதிகரித்து வருகிறதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

குறிப்பாக, ஆத்திசூடி வீதியில் மாணவியர்கள் தங்கியுள்ள தனியார் விடுதிகள் அதிகமுள்ளன. அந்த வீதியின் இருபுறமும் மாலையில் இளைஞர்கள் குழுமி போக்குவரத்துக்கு இடையூறாகவும் நிற்பது வழக்கம்.

மாணவிகளுக்கு அந்தரங்க உறுப்பை காண்பித்து, கடந்த காலங்களில் ஒரு சிலர் கையும் மெய்யுமாக பிடிபட்டு பொதுமக்களினாலும் பல்கலைக்கழக மாணவர்களாலும் நையப்புடைக்கப்பட்ட சம்பவங்களும் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் பொலிஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்கலைக்கழக மாணவர்கள் மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ரணிலை திருடன் என்ற நீதியமைச்சர் மன்னிப்பு கோர வேண்டும்: ஜீவன் தொண்டமான் வலியுறுத்தல்

Pagetamil

யாழில் சங்கிலி அறுத்தவர் கைது!

Pagetamil

யாழில் புள்ளிங்கோக்களை மாணவர்களாக மாற்றிய அதிபர்

Pagetamil

வடக்கு கிழக்கு மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை அவயவங்கள் – 20 பேர் இந்தியா பயணம்

Pagetamil

பாடசாலை மாணவர்கள், சீசன் டிக்கெட்காரர்களை ஏற்றாத இ.போ.ச பேருந்துகளா?: 1958 இற்கு அழையுங்கள்!

Pagetamil

Leave a Comment