26.3 C
Jaffna
December 30, 2024
Pagetamil
இலங்கை

காற்றோட்டமில்லாத அறையில் தனிமையில் வைக்கப்பட்டிருந்தார்… யாரையும் சந்திக்க அனுமதியில்லை; கோடீஸ்வர தொழிலதிபர் லலித் கொத்தலாவல மரண சம்பவங்கள்: நீதிமன்றத்தில் வெளியான தகவல்கள்!

செலிங்கோ குழுமத்தின் தலைவராக கடமையாற்றிய தேஷமான்ய லலித் கொத்தலாவலவின் மரணம் இயற்கையான மரணம் என நீதித்துறை மருத்துவ வல்லுனர்கள் அறிவித்துள்ளனர். ஆனால், அவரது மரணம் இயற்கை மரணம் என தோற்றம் காண்பிக்கப்பட்டது, அவரது சட்டத்தரணிகள் உள்ளிட்ட சிலரின் சதித்திட்டத்தின் விளைவு இது  என செலிங்கோ வைப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜூட் மார்கோ பெரேரா நேற்று (03)  கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன முன்னிலையில் சாட்சியமளித்தார்.

லலித் கொத்தலாவல தனது மனைவியுடன் கொழும்பு எலிபண்ட் வீதியில் அமைந்துள்ள அவரது வீட்டில் தங்கியிருந்தார். அந்த வீட்டிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டு கொழும்பு பொன்சேகா மாவத்தையில் உள்ள அவரது அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு ஜன்னல் மற்றும் காற்றோட்டம் இல்லாத 10×12 அடி அறையில் தங்க வைக்கப்பட்டார். வயதான போதிலும், நள்ளிரவில் அவ்வப்போது கீரை கலந்த சூப் மற்றும் ஒரேஞ்ச் பானம் கூட குடிக்க வைத்ததாக நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்தார்.

லலித் கொத்தலாவல அல்லது அவர் பதவி வகித்த நிறுவனங்களுக்குச் சொந்தமான எந்தவொரு சொத்தும் விற்கவோ, எக்காரணம் கொண்டும் இடமாற்றம் செய்யப்படுவதோ அல்லது மேற்படி பணத்தைப் பயன்படுத்தி வேறு தொழில்களை தொடங்குவதோ தடைசெய்யும் பிணை நிபந்தனையை உயர் நீதிமன்றம் விதித்துள்ள போதிலும், குறித்த குழு மேற்படி பிணை நிபந்தனையை மீறி பல பில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்களை தங்களுக்கு மாற்றியமைத்துள்ளதாகவும் சாட்சி நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

அந்த சட்டவிரோத செயலில் ஆர்வம் காட்டியவர்கள் திருமதி சிசிலியா கொத்தலாவலவின்  பணியாளர்கள், சுத்தம் செய்பவர், சாரதி உட்பட பலர் சேவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும், தடுத்து வைக்கப்பட்டிருந்த லலித் கொத்தலாவலவுடன் பேசுவதற்கு எவருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை எனவும் நீதிமன்றில் சாட்சியமளித்த சாட்சியாளர் தெரிவித்தார்.

அவரை வலுக்கட்டாயமாக தடுத்து வைக்க நடவடிக்கை எடுத்த சட்டத்தரணி லலித் கொத்தலாவலக்கு அருகில் அவரது சகோதரி தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக தெரிவித்தார்.அவர் கொத்தலாவலவின் சகோதரி என்பதை மறைத்து, ஆதரவற்ற பெண்ணென குறிப்பிடப்பட்டதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

லலித் கொத்தலாவல அலுவலகம் அமைந்துள்ள கட்டிடத்திலும் அதனை அண்டிய அவரது சொத்தில் அமைந்துள்ள கட்டிடங்களிலும் லலித் கொத்தலாவலவின் சொந்தப் பணத்தில் வியாபார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் நீதிமன்றில் தெரிவித்த சாட்சியாளர் தெரிவித்தார்.

சட்டத்தரணி நிஷ்மி கொடல்லவத்த, சட்டத்தரணி சமன் லியனகே, சட்டத்தரணி தினேஷ் ஜயவீர, சட்டத்தரணி எஸ். பி. எஸ். ரசிக, முன்னாள் இரகசியப் பொலிஸ் அதிகாரி லலித் அமரசிங்க, ஓய்வுபெற்ற பொலிஸ் உத்தியோகத்தர் பிரியஞ்சன வன்னியாராச்சி, தற்போதைய பொலிஸ் மா அதிபரின் மைத்துனர் எனக் கூறும் மஹிந்த உபசேன,
சட்டத்தரணி சமன் லியனகேவின் சகோதரியான நிரோஷா பிரியதர்ஷனி மற்றும் பலர் திருமதி சிசிலியா கொத்தலாவலவின் கடும் ஆட்சேபனையை பொருட்படுத்தாமல் கொத்தலாவலவை தமது இல்லத்தில் இருந்து கொழும்பு 7, பொன்சேகா மாவத்தையில் அமைந்துள்ள அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றதாக சாட்சி கூறினார்.

மேற்படி சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு காரணமான சட்டத்தரணி தனது சட்ட நிறுவனத்தின் அலுவலகத்தை அதே வளாகத்தில் நடத்தி வருவதாகவும், லலித் கொத்தலாவல, சட்டத்தரணியின் சகோதரிக்கு விசேட சலுகை வழங்க நடவடிக்கை எடுத்ததாகவும், லலித் கொத்தலாவலவை அனாதை இல்லத்தில் சேர்க்கப் போவதாக மிரட்டல் விடுத்தே இந்த இந்த சட்டவிரோத செயல்கள் அனைத்தையும் செய்ததாகவும் சாட்சி நீதிமன்றத்தில் தெரிவித்தார். அது பலவந்தமாகச் செய்யப்பட்டது என்றும் அவர் கூறினார்.

குறித்த அச்சுறுத்தல்கள் தொடர்பில் லலித் கொத்தலாவல அவர்களே பல தடவைகள் பம்பலப்பிட்டி பொலிஸில் முறைப்பாடு செய்ததாகவும், லலித் கொத்தலாவல கொழும்பு மாவட்ட நீதிமன்றில் இந்த சட்டவிரோத நடவடிக்கைக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ததாகவும் சாட்சியமளித்தார்.

லலித் கொத்தலாவல 13 பிணை நிபந்தனைகளின் கீழ் உயர் நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டார், மேலும் கோல்டன் கீ வைப்பாளர்கள் மற்றும் செலிங்கோ நிறுவனங்களுக்குப் பாதகமாக வேறு தொழில்களில் ஈடுபடுவதைத் தடுப்பதும், செலிங்கோ நிறுவனங்களுக்கு சொந்தமான சொத்துக்கள் விற்கப்படுவதைத் தடுப்பதும் முக்கிய பிணை நிபந்தனைகளில் ஒன்றாகும்.

பிணை நிபந்தனைகளை மீறியமைக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் தாம் தாக்கல் செய்த மனுவை எதிர்வரும் 9ஆம் திகதி பரிசீலிக்க உச்ச நீதிமன்றம் ஏற்கனவே திகதி நிர்ணயித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

லலித் கொத்தலாவல அவர்களின் சமையற்காரராக பணியாற்றியவர் நீதிமன்றில் சாட்சியமளித்த அனைத்து உண்மைகளையும் உறுதிப்படுத்தும் சத்தியக் கடதாசிகளை சமர்ப்பித்துள்ளதுடன் கௌரவ நீதிமன்றம் தம்மிடம் ஆலோசிக்க விரும்பினால் சமர்பிக்கத் தயார் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

லலித் கொத்தலாவலவின் மரணம் தொடர்பான முதற்கட்ட நீதவான் விசாரணையின் சாட்சியப் பரிசோதனை நேற்று (03) ஆரம்பமாகவிருந்தது. சாட்சியினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையின் பிரகாரம் அவரது சாட்சியத்தை முதலில் எடுக்க நீதிமன்றம் தீர்மானித்ததுடன், லலித் கொத்தலாவலவின் மரணம் சந்தேகத்திற்குரியது என தெரிவித்த திருமதி சிசிலியா கொத்தலாவலவின் சகோதரியான திருமதி செரின் விக்ரமசிங்கவும் சாட்சியமளிக்க, நீதிமன்றில் ஆஜரானார். ஆனால் சிங்கள ஆங்கில மொழிபெயர்ப்பாளர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதனால் சாட்சிய விசாரணையை எதிர்வரும் 6ஆம் திகதிக்கு ஒத்திவைக்க நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பம்பலப்பிட்டி பொலிஸ் பிரிவின் பொலிஸாரும் சாட்சியமளிப்பதற்காக நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தனர்.

அஜித் காரியவசம் வழக்குத் தொடரை வழிநடத்தியதுடன், சிரேஷ்ட சட்டத்தரணி  ஹாபில் பாரிஸ் மற்றும் சட்டத்தரணி சனல் உலயரத்ன ஆகியோர் திரு.லலித் கொத்தலாவலவின் மனைவியின் சகோதரியின் உரிமைகளுக்காக வாதிட்டனர்.

மேலும், சாட்சி அளித்த சாட்சியத்தை உறுதிப்படுத்த, தேவைப்பட்டால் மேலும் சாட்சிகளை அழைக்க கூடுதல் நீதவான் அனுமதி அளித்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

புதிய இராணுவத்தளபதி நியமனம்!

Pagetamil

புதிய கடற்படை தளபதி நியமனம்

Pagetamil

யாழில் போராட்டம்

Pagetamil

இணைய மிரட்டல் சம்பவம் இரு மாணவர்கள் கைது

east tamil

“தனியார் வகுப்புகள் இல்லாமல் சிறந்த கல்வி பெற இயலும்” – ஜோசப் ஸ்டாலின் கருத்து

east tamil

Leave a Comment