26 C
Jaffna
November 30, 2023
மலையகம்

மின் விளக்கை ஒளிரவிட்டதால் 3 பேர் மீது தாக்குதல்: கடமை நேரத்தில் தூங்கியவர் அட்டகாசம்!

கண்டி தேசிய வைத்தியசாலையில் மின்விளக்கை ஏற்றியதால் தூக்கம் கலைத்ததாக குறிப்பிட்டு, மூன்று சிற்றூழியர்களை தாக்கிய குற்றச்சாட்டில் சிற்றூழியர் ஒருவர் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

கண்டி தேசிய வைத்தியசாலையின் வெளிநோயாளர் சிகிச்சைப் பிரிவின் அறையொன்றில் கடமை நேரத்தின் போது உறங்கிக் கொண்டிருந்த இந்த சிற்றூழியர், மின்விளக்கு ஒளிரவிடப்பட்டதால் தூக்கம் கலைந்ததாக குறிப்பிட்ட மூன்று  சிற்றூழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தாக்கியதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சுகாதார பணிப்பாளர் நாயகத்தின் உத்தரவின் பிரகாரம், அவர் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கண்டி தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் இரேஷா பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

அவரது தாக்குதலால் காயமடைந்த மூன்று சிற்றூழியர்கள்  17ஆம் இலக்க விடுதியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தாக்குதலை மேற்கொண்டதாக கூறப்படும் சிற்றூழியரை வைத்தியசாலை பொலிசார் கைது செய்து மேலதிக விசாரணைகளுக்காக கண்டி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

நேற்று முன்தினம் (01) காலை இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

UPDATE: மண்மேடு சரிந்து விழுந்ததில் 2 யுவதிகள் பலி!

Pagetamil

காசல்ரீ நீர்த்தேக்கத்திலிருந்து நீர் வெளியேற்றப்படுகிறது!

Pagetamil

மாணவர்களுக்கு பொலித்தீன் உண்ணும் தண்டனை வழங்கிய அதிபருக்கு இடமாற்றம்

Pagetamil

மாணவர்களை பொலித்தீன், செய்தித்தாள் உண்ணும் தண்டனை வழங்கிய அதிபர்!

Pagetamil

மண்சரிவில் சிக்கி இரு யுவதிகள் பலி

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!