வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின்
பாவனையாளர்களுக்கு மாதாந்தம் வழங்கப்பட்டு வந்த நீர் கட்டணச் சிட்டை
நவம்பர் மாதம் (01.11.2023) தொடக்கம் வழங்கப்படமாட்டாது எனவும் அதற்கு
பதிலாக குறுந்தகவல் (SMS) மற்றும் மின்னஞ்சல் (e.Bill) ஊடாகவே மாதாந்த
நீர்க் கட்டண விபரங்கள் பாவனையாளர்களுக்கு அனுப்பபடும் என தேசிய நீர்
வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
சுற்றுச் சூழல் நன்மை, செலவுகளை குறைத்தல், தொழிநுட்ப வசதிகளை
பயன்படுத்தல் போன்ற காரணங்களை அடிப்படையாக கொண்டு இந் நடவடிக்கை
மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி பாவனையாளர்களுக்கு மாதாந்தம் நீர்க்
கட்டண விபரங்கள் அவர்களது தொலைபேசிக்கு குறுந்தகவல்கள் மூலம் அல்லது
மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்படும். அவற்றினை பயன்படுத்தி
கட்டணங்களைச் செலுத்திக் கொள்ள முடியும்.
மேலும் நீர்ப் பாவனையாளர்கள் தங்களின் தொலைபேசி இலக்கம் அல்லது
மின்னஞ்சல் முகவரிகளை சரியாக பதிவு செய்துகொள்ளாதவர்கள் நீர்மானி
வாசிப்பாளர்கள் சமூகம் தருகின்ற போது அவர்களுடன் தொடர்பு பதிவு
செய்துகொள்ள முடியும் எனவும் நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை
அறிவித்துள்ளது. பாவனையாளர்கள் இது தொடர்பில் மேலதிக விபரங்களை
பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் 1939 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு
கொண்டு தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.