Pagetamil
இலங்கை

அனுராதபுரத்தில் வேகமாக பரவும் வைரஸ் தொற்று!

வறட்சியான காலநிலை முடிவுக்கு வந்துள்ள நிலையில், அனுராதபுரம் மாவட்டத்தின் சில கிராமங்களில் வைரஸ் நோய் வேகமாக பரவி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கண் நோய்கள் பரவி வருவதாலும், இருமல், காய்ச்சல் போன்ற நோய்களால் சிறு குழந்தைகள் பாதிக்கப்படுவதாலும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இவ்வாறான அறிகுறிகள் காணப்படும் பாடசாலை மாணவர்கள் மற்றும் பெரியவர்கள் வைத்தியரை அணுகி மருந்துகளை பெற்றுக்கொள்ளுமாறு வடமத்திய மாகாண  சுகாதார சேவைகள் மாகாண பணிப்பாளர் டொக்டர் டபிள்யூ எம் பாலித பண்டார தெரிவித்துள்ளார்.

மேலும், இவ்விவகாரத்தில் பொதுமக்கள் தேவையில்லாத அச்சம் கொள்ள வேண்டாம் என்றும் அவர் கூறினார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

யோஷித ராஜபக்ச கைது

east tamil

இன்றைய வானிலை

Pagetamil

இயக்கத்துக்கு பயந்து உயர் நீதிமன்றம் சென்ற மஹிந்த!

Pagetamil

தமிழ் தேசிய கட்சிகளின் ஒற்றுமை சாத்தியமா?

Pagetamil

சாரதிகளுக்கான முக்கிய அறிவுறுத்தல்

east tamil

Leave a Comment