தொழிலதிபர் தினேஷ் ஷாப்டரின் கழுத்து மற்றும் முகத்தில் அழுத்தம் ஏற்பட்டதன் காரணமாகவே மரணமடைந்துள்ளதாக கொழும்பு நீதவான் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இதன்படி, இச்சம்பவத்தின் ஊடாக குற்றச்செயல் இடம்பெற்றுள்ளதாக தீர்ப்பளித்த நீதவான், சம்பந்தப்பட்ட சந்தேக நபர்களை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்துமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.
மரண விசாரணையின் போது சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகள் மற்றும் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட ஐவரடங்கிய நிபுணர் குழுவின் அறிக்கைகளை பரிசீலித்த கொழும்பு மேலதிக நீதவான் திருமதி ரஜீந்திர ஜயசூரிய இந்த தீர்ப்பை வழங்கினார்.
இச்சம்பவத்தின் மூலம் குற்றச் செயல்கள் இடம்பெற்றுள்ளது எனவும், அதற்கமைவாக சம்பந்தப்பட்ட சந்தேக நபர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நீதவான் குற்றப் புலனாய்வு திணைக்கள பணிப்பாளருக்கு வழங்கிய உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மரண விசாரணையின் தீர்ப்பை அறிவித்த நீதவான், மரணத்திற்கான காரணத்தை கண்டறிய நீதிமன்றத்தினால் நியமிக்கப்பட்ட 5 பேர் கொண்ட நிபுணர் குழு, பிரேத பரிசோதனை அறிக்கைகள் மற்றும் பிற தகவல்களைக் கருத்தில் கொண்டு தீர்ப்பை அறிவிக்கும் என்றும் கூறினார்.
மரணத்திற்கான காரணத்தைக் கண்டறிய நீதிமன்றத்தினால் நியமிக்கப்பட்ட விசேட மருத்துவக் குழுவின் பெரும்பான்மை உறுப்பினர்களின் கருத்தின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
ஐந்து பேர் கொண்ட நிபுணர் மருத்துவக் குழுவின் உறுப்பினர்களின் கருத்து 4:1 என கூறப்பட்டுள்ளதாகவும் நீதவான் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விசாரணையின் பிரகாரம், குறித்த மரணம் குற்றமென்று தீர்ப்பளித்த நீதவான், சந்தேக நபர்களை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்துமாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.
அதன் பின்னர், முறைப்பாட்டை மார்ச் 20ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறும், அது தொடர்பான விசாரணைகளின் முன்னேற்றத்தை அன்றைய தினம் நீதிமன்றில் தெரிவிக்குமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.