மதுபோதையில் பேருந்து செலுத்திய இ.போ.ச சாரதியின் சாரதி அனுமதிப்பத்திரம் ஊர்காவற்றுறை நீதிமன்றத்தினால் இரத்து செய்யப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் (22) ஊர்காவற்றுறையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த இ.போ.ச பேருந்தை வழிமறித்து சோதனையிட்ட போது, சாரதி அதுபோதையிலிருந்தமை தெரிய வந்தது.
அவருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டு, நேற்று அவர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டார்.
சந்தேகநபர் குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து, அவருக்கு 30 ஆயிரம் ரூபா தண்டம் விதிக்கப்பட்டதுடன், அவரது சாரதி அனுமதிப்பத்திரம் ஒரு வருடத்துக்கு இரத்து செய்யப்பட்டது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1