இலங்கை கடற்படை மற்றும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஒருங்கிணைந்த புலனாய்வு நடவடிக்கையின் அடிப்படையில் பெறப்பட்ட தகவலின் அடிப்படையில், போதைப்பொருள் கடத்திய உள்ளூர் பலநாள் மீன்பிடி இழுவை படகு கடற்படையால் கைப்பற்றப்பட்டது.
இடைமறிக்கப்பட்ட உள்ளூர் பலநாள் மீன்பிடி இழுவை படகு டோண்ட்ரா மீன்பிடி துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டது, அங்கு இலங்கை கடலோர காவல்படையினருடன் கவனமாக தேடுதல் நடத்தியதில், 212 கிலோகிராம் (பொதிகள் உட்பட) ஹெரோயின் மற்றும் கிரிஸ்டல் மெத்தம்பெட்டமைன் (ICE) ஆகியவை நேற்று (22) காலை படகில் இருந்து மீட்கப்பட்டன.
காலிக்கு மேற்கே சுமார் 91 கடல் மைல்கள் (சுமார் 168 கிமீ) தொலைவில் மேற்கொள்ளப்பட்ட இந்த விசேட நடவடிக்கையில் கப்பலில் இருந்த பல சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்களைப் பார்வையிடுவதற்காக மீன்பிடி துறைமுகத்திற்கு வருகை தந்தார்.
இலங்கை கடலோரக் காவல்படையின் சமுத்திரரக்ஷா கப்பல் சந்தேகத்தின் பேரில் காலிக்கு மேற்கே 91 கடல் மைல் (சுமார் 168 கிலோமீட்டர்) தொலைவில் சந்தேகத்தின் பேரில் உள்ளூர் மீன்பிடி இழுவைப்படகு ஒன்றை அக்டோபர் 20 மாலை தடுத்து நிறுத்தியது. மேலதிக தேடுதலுக்காக டோண்ட்ரா மீன்பிடி துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டது.
நேற்று (22) காலை இழுவைப்படகு கரைக்கு கொண்டு வரப்பட்ட நிலையில், 180 கிலோ மற்றும் 800 கிராம் எடையுள்ள 160 ஹெரோயின் பொதிகள் மற்றும் சுமார் 31 கிலோகிராம் எடையுடைய 28 பொதிகள் கிரிஸ்டல் மெத்தம்பெட்டமைன் (ஐஸ்) 12 சாக்குகளில் இருந்து மீட்கப்பட்டன. போதைப்பொருள் கடத்தல் படகு மற்றும் கப்பலில் இருந்த சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நடவடிக்கையில் கைப்பற்றப்பட்ட சுமார் 212 கிலோ 350 கிராம் எடையுள்ள போதைப்பொருளின் மதிப்பு ரூ.4,000 மில்லியனுக்கும் அதிகமாக இருக்கும் என நம்பப்படுகிறது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 26 – 53 வயதுக்கு இடைப்பட்ட டோண்ட்ரா மற்றும் கொட்டேகொட பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் போதைப்பொருள் மற்றும் மீன்பிடி இழுவை படகு என்பன சட்ட நடவடிக்கைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
இலங்கை கடற்படை 2023 ஆம் ஆண்டு நடவடிக்கைகளின் போது ரூ.15,160 மில்லியனுக்கும் அதிகமான மொத்த பெறுமதியுடைய போதைப்பொருளை கைப்பற்றியுள்ளது. இலங்கை கடற்படை மற்ற சட்ட அமலாக்க அதிகாரிகளுடன் ஒருங்கிணைத்து, இந்த வகையான போதைப்பொருள் எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள உறுதிபூண்டுள்ளது. மீன்பிடித்தல் என்ற போர்வையில் போதைப்பொருள் கடத்தல் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.