25.1 C
Jaffna
January 8, 2025
Pagetamil
இலங்கை

‘நான் செத்தால்தான் உங்கள் அனைவருக்கும் சரியாக இருக்கும்’

சனிக்கிழமை அதிகாலை துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி சடலமாக மீட்கப்பட்ட எஹலியகொட பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரியங்கர டி சில்வா தனது சேவைத் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பிரியங்கர டி சில்வா தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் இறந்து கிடந்தார்.

உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ஓஐசி ஏன் தற்கொலை செய்து கொண்டார் என்பது தெரியவில்லை. அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என்றார்.

கடந்த வாரம் விடுமுறையில் இருந்த தனது மகன் வீட்டிற்கு வந்ததாகவும், “அம்மா, எனக்கு கொலை மிரட்டல் வந்துள்ளது” என்று கூறியதாக அவரது தாய் பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.

ஓ.ஐ.சி.யின் மனைவி, அவரது மரணம் தொடர்பான விசாரணையின் போது, அவரது குடும்ப உறுப்பினர்களுடன் ஏற்பட்ட தகராறில், “நான் இறந்தால்தான் உங்கள் அனைவருக்கும் சரியாக இருக்கும்” என்று தனது கணவர் கூறியதாக காவல்துறையினரிடம் கூறியதாக போலீஸ் தகவல் வெளியாகியுள்ளது.

வடுவ மொல்லிகொட பிரதேசத்தில் வசிக்கும் ஓ.ஐ.சி, 2021 நவம்பர் 20 முதல் எஹலியகொட ஓ.ஐ.சியாக இருந்துள்ளார். அவர் எஹலியகொட பிரதேச மக்கள் மத்தியில் பிரபலமான அதிகாரியாக இருந்ததாக கூறப்படுகிறது.

பிரதான பொலிஸ் பரிசோதகர் பிரியங்கர டி சில்வா (42) இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் ஒராங்குட்டான் உயிரிழப்பு

east tamil

வெளிநாடு செல்லும் கனவுக்காக போதைப்பொருள் விற்ற மாணவன் கைது

east tamil

வேலை நிறுத்தத்துக்கு தயாராகும் தனியார் பேருந்து சங்கங்கள்!

Pagetamil

இலங்கையில் 30,000 ஆசிரியர்கள் பற்றாக்குறை

east tamil

புலம்பெயர்ந்த இலங்கையர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

east tamil

Leave a Comment