அஹுங்கல்ல – உரகஹ வீதியின் கல்வெஹர பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் தாய், தந்தை மற்றும் நான்கு மாத குழந்தை ஆகியோர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அஹுங்கல்ல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த மூவரும் பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும், அவர்களை கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான மூவரும் அஹுங்கல்ல பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனவும், மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த வேளையில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தென்னிலங்கையில் பாதாள உலகக் குழுத் தலைவர் ஒருவரின் நெருங்கிய உறவினரின் குடும்பம் மீதே இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.