தென்மராட்சி பிரசேதத்தில் இரு கிளைமோர் குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சாவகச்சேரி பொலிசார் தெரிவித்துள்ளனர்.
தென்மராட்சி சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் கோவிலுக்கும் பொருளாதார மத்திய நிலையத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் வீதியில் இருந்து சுமார் 15 மீற்றர் தொலைவில் வயல் பகுதியில் இரு கிளைமோர் குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
பழைய இரும்பு சேகரிக்கும் வியாபாரி ஒருவர் இதனை கண்டு வழங்கிய தகவலின் அடிப்படையில் சாவகச்சேரி பொலிசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
அருகில் நீரோடும் பகுதி காணப்படுகிறது. நீரில் அடித்து வரப்பட்டதா அல்லது யாரேனும் அவற்றை கொண்டு வந்தார்களா என்பது தொடர்பில் சாவகச்சேரி பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1