கடந்த புதன்கிழமை அமெரிக்க ஜனாதிபதி இஸ்ரேலுக்கு பயணம் மெற்கொண்டிருந்தபோது, பாலஸ்தீன அதிகாரசபையின் தலைவர் மஹ்மூத் அப்பாஸூடன் தொலைபேசியில் பேச முயற்சித்தும், வெற்றியளிக்காத தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுடன் தொலைபேசியில் பேசுவதற்கு அப்பாஸ் மறுத்துவிட்டார் என்று கான் பொது ஒளிபரப்பு செய்தி வெளியிட்டுள்ளது.
ரமல்லாவில் உள்ள பெயரிடப்படாத பாலஸ்தீனிய ஆதாரத்தை மேற்கோள் காட்டி இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
பைடன் நிர்வாக அதிகாரிகள், இரண்டு தலைவர்களுக்கு இடையே தொலைபேசி அழைப்பை ஏற்பாடு செய்ய முயன்றனர், ஆனால் அப்பாஸ் கோரிக்கையை நிராகரித்தார்.
இந்த பயணத்தை தொடர்ந்து ஜோர்டானில், எகிப்து தலைவர் மற்றும் அப்பாஸூடன் உச்சிமாநாட்டை நடத்த பைடன் திட்டமிட்டிருந்தார். எனினும் அப்பாஸ் அந்த சந்திப்பையும் இரத்து செய்தார். பாலஸ்தீனத்திலுள்ள மருத்துவமனையில் இஸ்ரேல் குண்டுவீசியதில் 471 பேர் கொல்லப்பட்டதையடுத்து அப்பாஸ் இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டார்.