இராணுவ அதிகாரியான தனது கணவருடன் தகாத உறவில் ஈடுபட்ட இளம்பெண்ணின் நிர்வாண புகைப்படங்களை அந்த பெண்ணிண் வட்ஸ்அப் மூலம் திருப்பி அனுப்பி, தகாத உறவை நிறுத்தாவிட்டால் அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகும் என அச்சுறுத்தியதாகக் கூறப்படும் 31 வயதுப் பெண்ணை தலா இரண்டு இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் நேற்று (19) பிற்பகல் உத்தரவிட்டார்.
கணவரின் கையடக்கத் தொலைபேசியை பரிசோதித்த போது கிடைத்த நிர்வாணப் புகைப்படத்தை சந்தேக நபர் சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு அனுப்பி வைத்ததாகவும், அதனை இணையத்தில் வெளியிடவில்லை என்றும் சந்தேகநபரான பெண்ணின் சட்டத்தரணி சுதர்சன் விக்ரமரத்ன நீதிமன்றில் தெரிவித்தார்.
சந்தேகநபரின் செயலால் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என சட்டத்தரணி கூறியதை பரிசீலித்த நீதவான் அவருக்கு பிணை வழங்கியுள்ளார்.
வழக்கு விசாரணை வரும் 16ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.