Pagetamil
இலங்கை

பொலிஸ்மா அதிபரை நீக்கும் முடிவை மாற்றியமைத்த ஜனாதிபதி

பாதுகாப்பு அமைச்சராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும், பொலிஸாருக்குப் பொறுப்பான பொதுப் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸும் இலங்கையில் இல்லாத போது பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவை அந்தப் பதவியில் இருந்து நீக்குவதற்காக அரசியலமைப்பு பேரவையில் எடுக்கப்பட்ட தீர்மானத்தை மாற்றியமைக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (17) நடவடிக்கை எடுத்துள்ளார்.

அரசியலமைப்பு பேரவையால் இன்று அவர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட ஒரு மணி நேரத்திற்குள் பொலிஸ் மா அதிபர் மீண்டும் பதவியில் அமர்த்தப்பட்டுள்ளார்.

பொலிஸ் மா அதிபரை மீண்டும் நியமிப்பது தொடர்பான ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான அனைத்து உத்தரவுகளையும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உடனடியாக சீனாவின் பெய்ஜிங்கிலிருந்து வழங்கினார்.

பாதுகாப்பு அமைச்சராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும், பொலிஸ் துறைக்கு பொறுப்பான அமைச்சர் டிரான் அலஸும் இலங்கையில் இல்லாத போது, ​​பொலிஸ் மா அதிபரை அரசியலமைப்பு சபை நீக்கியது பாரிய தவறு என அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இரண்டு நாட்களில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டுக்கு திரும்பவுள்ள பின்னணியில் பொலிஸ் மா அதிபர் பதவி நீக்கம் செய்யப்பட்டமை சதித்திட்டத்தின் விளைவே என பலத்த சந்தேகம் எழுந்துள்ளதாகவும் சிரேஷ்ட அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

ஜனாதிபதியும் பொலிஸ் பொறுப்பதிகாரியும் நாட்டில் இல்லாத போது பொலிஸ் மா அதிபரை நீக்குவது நாட்டிலுள்ள முழு பொலிஸ் படையையும் முடக்குவதற்கு சமமானது எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

பதவிக்காலம் முடிவடைந்த பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவின் சேவையை மேலும் மூன்று வாரங்களுக்கு நீடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

பாடசாலை மாணவர்கள், சீசன் டிக்கெட்காரர்களை ஏற்றாத இ.போ.ச பேருந்துகளா?: 1958 இற்கு அழையுங்கள்!

Pagetamil

வாயில் வந்தபடி ‘வெடிக்கிறார்களா’ ஜேவிபியினர்?

Pagetamil

வட்டாரக்கட்சிகளின் போலிக்கோசமும்… சீ.வீ.கே யின் அவசரமும்: புதிய கூட்டணியின் பின்னணி சங்கதிகள்!

Pagetamil

மருத்துவர்களின் வேலை நிறுத்தம் ஒத்திவைப்பு!

Pagetamil

வெலிகம பதில் பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு பிணை

Pagetamil

Leave a Comment