27.6 C
Jaffna
November 29, 2023
இலங்கை

‘அவர்கள் இருவரையும் வைத்தியசாலை காவல் கடமைக்கு அனுப்பாதீர்கள்’: பாதுகாப்பு நிறுவனத்துக்கு அறிவிப்பு!

யாழ்போதனா வைத்தியசாலைக்கு வந்த நபர் மீது தாக்குதல் மேற்கொண்ட இரண்டு பாதுகாப்பு உத்தியோகத்தர்களையும் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு கடமைக்கு அனுப்ப வேண்டாமென சம்பந்தப்பட்ட பாதுகாப்பு நிறுவனத்துக்கு அறிவித்துள்ளதாக யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தெரிவித்தார்

வைத்தியசாலைக் காவலாளிகள் பொதுமகன் ஒருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போது பணிப்பாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது-

யாழ்ப்பாண போதன வைத்தியசாலை நுழைவாயிலில் வைத்தியசாலைக்கு வந்த நபர் ஒருவர் பாதுகாப்பு ஊழியர்களால் தாக்கப்பட்ட சம்பவமானது கண்டிக்கப்பட வேண்டியது.

இந்த விடயத்தை நான் மிகவும் கடுமையாக எச்சரிக்கை செய்துள்ளதோடு குறித்த பாதுகாப்பு கடமைகள் ஈடுபடும் தனியார் நிறுவனத்திற்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளேன்.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு காவலாளிகளையும் இன்றிலிருந்து வைத்தியசாலை பாதுகாப்பு கடமைக்கு அனுப்ப வேண்டாம் எனவும் அவர்களுக்கு எச்சரித்துள்ளேன்.

இவ்வாறான சம்பவங்களை இனி மேலும் ஏற்றுக்கொள்ள முடியாது. அதாவது பொதுமக்கள் வைத்திய சாலைக்கு சுதந்திரமாக வந்து தமது மருத்துவ தேவைகளை பூர்த்தி செய்வதற்காக பல்வேறுபட்ட வேலைத் திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
எனவே இவ்வாறான ஒரு சில சம்பவங்கள் மூலம் அவை மழுங்கடிக்கப்படக் கூடாது எனவும் தெரிவித்தார்

யாழ். போதனா வைத்தியசாலைக்கு மதுபோதையில் வந்த நபர் அநாகரிகமாக நடந்து கொண்டு, பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கு தாக்குதலை மேற்கொண்டு வைத்தியசாலைக்குள் செல்ல முற்பட்ட போதே பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள், அந்நபர் மீது தாக்குதலை மேற்கொண்டனர் என பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாழ்.போதனா வைத்தியசாலை நுழைவாயிலுக்கு அருகில் நபர் ஒருவரை பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் தாக்கும் காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகியது.

சம்பவம் தொடர்பில், யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ள நிலையில் தாக்குதலுக்கு இலக்கான நபரையும், தாக்குதல் மேற்கொண்ட பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் இருவரையும் கைது செய்து விசாரணைகள் மேற்கொண்ட நிலையில் தாக்குதல் நடத்திய காவலாளிகள் தாங்கள் தாக்குதல் நடத்தியமை தொடர்பில் பொலிசில் விளக்கமளித்துள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

சர்வதேச மனக்கணித போட்டிக்கு யாழில் இருந்து 19 மாணவர்கள்

Pagetamil

காங்கேசன்துறையில் துறைமுக அதிகார சபைக்கு சொந்தமான சொத்துக்களை சேதப்படுத்தி, தொடரும் இரும்பு திருட்டு

Pagetamil

ஊடகவியலாளர்கள் மீதான அச்சுறுத்தலை கண்டிக்கிறது யாழ் ஊடக அமையம்!

Pagetamil

யாழ் யுவதி கடத்தப்பட்டு வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டு கொலை: மரண தண்டனை விதிக்கப்பட்ட 2 இராணுவத்தினர் விடுதலை!

Pagetamil

மஹிந்த பயணித்த வாகனத்தின் மீது விழுந்த வீதித்தடுப்பு!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!