சம்மாந்துறையில் ஒரே இரவில் 4 இடங்களில் யானை தாக்குதல்

Date:

சம்மாந்துறை பிரதேச செயலக பிரிவில் உள்ள சம்மாந்துறை 08 கிராம சேவையாளர் பிரிவில் ஒரே நாளில் யானை தாக்கி 4 இடங்கள் சேதமடைந்துள்ளது.இன்று (11) அதிகாலை தனியான் யானை ஒன்று வந்து சென்றாதாக அப் பிரதேச மக்கள் தெரிவித்தனர்.

சம்மாந்துறை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள சம்மாந்துறை 08 கிராம சேவையாளர் பிரிவில் உள் நுழைந்த காட்டு யானை அப் பிரதேசத்தில் உள்ள பயன்தரும் வாழை, பயிர்களை சேதப்படுத்தி உள்ளதுடன் வீட்டின் சுவர்களும் உடைக்கப்பட்டு வீட்டில் உள் நெல் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள நெல் மூட்டைகளும் சேதப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த வருடம் காட்டுயானை தாக்குதலுக்கு உட்பட்டு 3 நபர்கள் உயிரிழந்துடன் முதலை தாக்குதலுக்கு உட்பட்டு ஒரு நபரும் உயிரிழந்துள்ளாதாக சம்மாந்துறை பிரதேச தேசிய அனர்த்த நிவாரண சேவை உத்தியோகத்தகர் எம் எஸ் எம் அஸாறுடீன் தெரிவித்தார்.

சம்மாந்துறை பிரதேசத்திற்குள் நாளாந்தம் காட்டு யானைகள் இரவு வேளைகளில் நுளைந்து சேதங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன. இதனால், மக்கள் அச்சமடைந்தவர்களாக உள்ளனர். அதனால், காட்டுயானைகளின் வருகையை கட்டுப்படுத்துவதற்கு உரிய அதிகாரிகள் நடவடிக்கைகளை எடுக்கவேண்டுமென்று பொது மக்கள் கேட்டுக் கொள்கிறார்கள்.

spot_imgspot_img

More like this
Related

‘பிக்பாஸ்’ பிரபலம் வர்ஷினி வெங்கட் கைது – பின்னணி என்ன?

ஆந்திர தொழிலதிபரிடம் ரூ.5 லட்சம் பறித்த வழக்கில் ‘பிக்பாஸ்’ பிரபலம் வர்ஷினி...

எழுத்தாளர், தொழிற்சங்கவாதி மு.சிவலிங்கம் காலமானார்

மலையகத்தின் சிரேஷ்ட எழுத்தாளரும், இலக்கிய ஆளுமையும், தொழிற்சங்கவாதியும், கலைஞருமான மு. சிவலிங்கம்...

நுவரெலியா, ஹட்டன் வலய பாடசாலைகளுக்கு விடுமுறை

நுவரெலியா மாவட்டத்தில் நிலவும் மோசமான வானிலை காரணமாக, நாளை (25) பாடசாலைகளைத்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்