விஜய் நடித்துள்ள ‘லியோ’ படத்தின் 3வது சிங்கிளான ‘அன்பெனும்’ பாடல் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள படம் ‘லியோ’. இந்தப் படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன், பிரியா ஆனந்த், மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலி கான் ஆகியோர் நடித்துள்ளனர். இந்தப் படத்தை செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ தயாரிக்கிறது. வரும் ஒக்டோபர் 19ஆம் திகதி திரையரங்குகளில் இப்படம் வெளியாக உள்ளது.
விஜய்யின் பிறந்த நாளான கடந்த ஜூன் 22 ஆம் திகதி ‘லியோ’ படத்தின் முதல் சிங்கிளான ‘நான் ரெடி’ பாடலை படக் குழு வெளியிட்டது. இந்தப் பாடலை அனிருத் இசையில் நடிகர் விஜய், அனிருத், அசல் கோலார் ஆகியோர் பாடியுள்ளனர். பாடல் வரிகளை விஷ்ணு எடவன் எழுதியுள்ளார். இப்பாடல் நல்ல வரவேற்பை பெற்றது.
இரண்டாவது சிங்கிளான ‘Badass’ பாடல் கடந்த 28ஆம் திகதி வெளியாகி ஹிட்டடித்தது.இந்நிலையில் ‘லியோ’ படத்தின் மூன்றாவது சிங்கிள் பாடலான ‘அன்பெனும்’ பாடல் வெளியிடப்பட்டுள்ளது.
அனிருத், லோதிகா இணைந்து பாடியுள்ள இப்பாடலை விஷண் எடவன் எழுதியுள்ளார். மெலோடி பாடலான இப்பாடல் விஜய் – த்ரிஷா இடையிலான காதல் பாடலாக உருவாகியுள்ளது. ‘அன்பெனும் ஆயுதம் தானே…உந்தன் நெஞ்சமே’, ’விரலோடு விரல் கோர்த்து… மாரோடு அணைப்பாயே… அன்பெனும் ஆயுதம் நீயே.. என்றென்றும் வீரனே’ என பாடல் வரிகள் மழைக்கு பிறகான சாரலைப்போல பாடலுடன் காதலை பரிமாறுகின்றன.