25.1 C
Jaffna
January 18, 2025
Pagetamil
இலங்கை

யாழ்ப்பாணத்தை மிரட்டிய பயங்கர குற்றக்கும்பல் உறுப்பினர் கைக்குண்டுடன் கைது!

யாழப்பாணம், வடமராட்சி பகுதியில் பொதுமக்களுக்கு பெரும் அச்சுறுததலாக செயற்பட்ட குற்றக்கும்பல் உறுப்பினர் ஒருவரை நெல்லியடி பொலிசார் மடக்கிப் பிடித்துள்ளனர்.

நீண்டகாலமாக பொலிசாருக்கு டிமிக்கி கொடுத்து வந்த இந்த குற்றக்கும்பல் உறுப்பினர் கைது செய்யப்பட்ட போது, கைக்குண்டு, 5 கிராம் ஹெரோயின்  போதைப்பொருள் என்பன மீட்கப்பட்டன.

துன்னாலை கிழக்கு, குடவத்தையில் திருமணம் செய்துள்ள 33 வயதான இந்த நபர், வவுனியாவை சேர்ந்தவர். வடமராட்சி பிரதேசங்களில் முன்னணி போதைப்பொருள் வர்த்தகராகவும், வாள்வெட்டு உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடுபவராகவும் விளங்கினார்.

தென்னிலங்கை பாதாள உலகக்குழுக்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தார் என பொலிசார், புலனாய்வு பிரிவினரால் சந்தேகிக்கப்பட்டு வந்தது.

இந்த நபர் தொடர்பில் பொதுமக்கள் பொலிசாரிடமும், பல்வேறு நிறுவனங்களிலும் முறைப்பாடு செய்திருந்தனர். எனினும், பொலிசாருக்கு டிமிக்கி கொடுத்து வந்தர்.

அவர் நேற்றிரவு நெல்லியடி பொலிசாரால் மடக்கிப் பிடிக்கப்பட்டார். அவரிடமிருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டு ஒன்றும் மீட்கப்பட்டது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

நிதியமைச்சருக்கு யோதிலிங்கம் கண்டனம்

east tamil

ஹோட்டல் அடித்தளம் இடிந்து விழுந்து ஆறு மாணவர்கள் படுகாயம்

east tamil

மன்னார் துப்பாக்கிச் சூடு: பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்

east tamil

கடற்படையின் இலவச பல் மருத்துவ முகாம்

east tamil

மாடுகளை கடத்திய இருவர் கைது

east tamil

Leave a Comment