சிங்கள திரைப்பட நடிகர் ஜாக்சன் ஆண்டனி காலமானார்.
விபத்தின் பின்னர், அவர் கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தவர், தனது 65வது வயதில் காலமானார்.
ஜுலை 22, 2022 அன்று அனுராதபுரம்- தலாவ வீதியில் மொரகொட பிரதேசத்தில் ஜாக்சன் ஆண்டனி உட்பட மூவரை ஏற்றிச் சென்ற வண்டியொன்று காட்டு யானையுடன் மோதியது.
ஆபத்தான நிலையில் இருந்த ஜாக்சன் ஆண்டனி அநுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக விமானம் மூலம் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டார்.
பின்னர் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சுமார் ஒன்றரை வருடங்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (09) அதிகாலை காலமானார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1