இஸ்ரேலை ஏமாற்ற பல ஆண்டுகளாக தனது பிம்பத்தை மாற்ற ஹமாஸ் நூதனமாக செயற்பட்டது என, அந்த அமைப்புக்கு நெருக்கமான ஒரு ஆதாரத்தை மேற்கோளிட்டு ரொய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.
தாம் ஆயுத மோதலை விரும்பவில்லை, ஒப்பீட்டளவில் அமைதியை பராமரிக்க பொருளாதார ஊக்குவிப்புகளுடன் சமாதானம் செய்யலாம் என்ற நிலைப்பாட்டில் ஹமாஸ் இருப்பதாக, இஸ்ரேல் நம்பும்படி போலி வலையமைப்புக்களை உருவாக்கி ஹமாஸ் செயற்பட்டுள்ளது.
“ஹமாஸ் இஸ்ரேலுக்கு ஒரு சண்டைக்கு தயாராக இல்லை என்ற எண்ணத்தை கொடுத்தது” என்று அந்த வட்டாரம் கூறுகிறது.
“கடந்த மாதங்களில் இஸ்ரேலை தவறாக வழிநடத்த ஹமாஸ் முன்னோடியில்லாத உளவுத்துறை தந்திரத்தை பயன்படுத்தியது, இந்த பாரிய நடவடிக்கைக்கு தயாராகும் போது இஸ்ரேலுடன் சண்டையிடவோ அல்லது மோதலையோ செய்ய விரும்பவில்லை என்று ஒரு பொது தோற்றத்தை அளித்தது.”
“அதன் தயாரிப்புகளின் ஒரு பகுதியாக, ஹமாஸ் அமைப்பு ஒரு போலி இஸ்ரேலிய சமூகத்தை பயிற்றுவித்தது. இஸ்ரேல் நிச்சயமாக அவர்களைப் பார்த்தது. ஹமாஸ் மோதலில் ஈடுபடுவதில் ஆர்வம் காட்டவில்லை என்று அவர்கள் உறுதியாக நம்பினர்,” என்று அந்த ஆதாரத்தை மேற்கோளிட்டு ரொய்ட்டர்ஸ் குறிப்பிட்டுள்ளது.
“இஸ்ரேலுக்கு எதிரான இராணுவ சாகசத்திற்குத் தயாராக இல்லை என்ற முழுப் பிம்பத்தையும் ஹமாஸ் உருவாக்க முடிந்தது” என்று அந்த ஆதாரம் மேலும் கூறுகிறது.
முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் Yaakov Amidror ரொய்ட்டர்ஸிடம் கூறுகையில், இஸ்ரேலுடன் உறவுள்ள சில நாடுகள், ஹமாஸ் “அதிக பொறுப்பை” காட்டுவதாக ஜெருசலேமிடம் கூறி, பொய்யை உருவாக்கிவிட்டன என்றார்.
“அது உண்மை என்று நாங்கள் முட்டாள்தனமாக நம்ப ஆரம்பித்தோம்,” என்று அவர் கூறுகிறார்.
“எனவே, நாங்கள் தவறு செய்தோம். இந்த தவறை மீண்டும் செய்ய மாட்டோம், மெதுவாக ஆனால் நிச்சயமாக ஹமாஸை அழிப்போம்“ என்றார்.