இஸ்ரேலுக்குள் அதிரடியாக நுழைந்து திடீர் தாக்குதல் நடத்திய ஹமாஸ் போராளிகளால், ஏராளமாக இஸ்ரேல் இராணுவம், பொதுமக்கள் பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு பணயக்கைதியாக பிடிக்கப்பட்ட தெற்கு இஸ்ரேலை சேர்ந்த நோவா ஆர்கமணி என்ற யுவதி தொடர்பான காட்சிகளை குடும்பத்தினர் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர்.
ஆர்க்கமணியும், காதலனும் தெற்கு இஸ்ரேலில் திருவிழா ஒன்றில் கலந்து கொண்டிருந்தபோது, ஹமாஸ் போராளிகளிடம் சிக்கியுள்ளனர்.
ஆர்க்கமணியை ஹமாஸ் போராளிகள் ஒரு மோட்டார் சைக்கிளின் பின்புறத்தில் ஏற்றிச் செல்வதையும், அவர் “என்னைக் கொல்ல வேண்டாம்” என்று கத்துவதையும் வீடியோவில் காணலாம்.
மேலும் தனது காதலரான அவி நடனை நோக்கி தனது கைகளை நீட்டுவதையும் காணலாம்.
இஸ்ரேலுக்குள் பிடிக்கப்பட்ட பணயக்கைதிகள் காசாவிற்குள் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். பிடிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தெரிய வரவில்லை.
Palestinian terrorists captured an Israeli woman and took her hostage. Just hear her screams. pic.twitter.com/L8obwWxpL9
— Hananya Naftali (@HananyaNaftali) October 7, 2023