25.3 C
Jaffna
February 3, 2025
Pagetamil
இலங்கை

காங்கேசன்துறை- நாகப்பட்டினம் கப்பல் சேவை: இன்று சோதனைப் பயணம்!

இந்தியாவின் நாகப்பட்டினத்திலிருந்து இலங்கையின் காங்கேசன்துறைக்கு பயணிகள் கப்பல் சேவை எதிர்வருகின்ற 10ஆம் திகதி முதல் ஆரம்பிக்கவுள்ளது. இதற்கான சோதனை பயணம் இன்று (8) ஆரம்பிக்கிறது.

நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன்துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து துவங்கப்படும் என இந்திய ஒன்றிய அரசு அறிவித்திருந்தது. அதனை தொடர்ந்து ஒன்றிய அரசு வழங்கிய ரூ.3 கோடி நிதி கொண்டு நாகப்பட்டினம் துறைமுகத்தை ஆழப்படுத்தி, நவீனப்படுத்தும் முயற்சியில் தமிழ்நாடு அரசு ஈடுபட்டது.

குடிவரவு குடியகல்வு செயற்பாடு, மருத்துவ பரிசோதனை செய்வது, பயணிகள் கொண்டு வரும் உடமைகளை பாதுகாப்பாக வைப்பது மற்றும் ஆய்வு செய்வது என அனைத்திற்கும் தனித்தனியாக அறைகள் உருவாக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தன.

மேலும், நாகப்பட்டினம் துறைமுகத்தில் பணியாற்றுவதற்காக பாஸ்போர்ட் சோதனை செய்வது, பயணிகளின் உடமைகளை ஆய்வு செய்வது என பல்வேறு பணிகளில் பணியாற்றும் உத்தியோகத்தர்கள் டெல்லி சென்று பயிற்சி பெற்றனர்.

நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கை சென்று வர 6 ஆயிரம் லிட்டர் டீசல் தேவைப்படுவதால் பயணிகளுக்கான கட்டணம் 18 சதவீத ஜிஎஸ்டி வரியுடன் 6500 இந்திய ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து 60 நொட்டிக்கல் மைல் தூரத்தில் இலங்கை காங்கேசன்துறை துறைமுகம் அமைந்துள்ளதால், இரண்டு துறைமுகங்களுக்குமிடையிலான பயண நேரம் 3.30 மணித்தியாலங்களாக இருக்கும் என னகப்பல் நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்திய கப்பல் போக்குவரத்து கழகத்தின் மூலம் கொச்சி துறைமுகத்தில் உருவாக்கப்பட்ட ஏசி வசதியுடன் கூடிய cheriyapani என்ற பெயரிடப்பட்ட கப்பல் நேற்று (7) நாகை துறைமுகம் வந்தது.

கப்பலில் 150 பயணிகள் பயணிக்கலாம். கப்பல் முழுவதும் குளிரூட்டப்பட்டுள்ளது. கப்பலின் சோதனை ஓட்டம் இன்றும் ( 8) நாளை (9) திங்கள்கிழமையும் நடைபெற உள்ளது. சோதனை ஓட்டத்தில் கப்பலில் பணியாற்றும் 14 ஊழியர்கள் மட்டும் பயணம் செய்ய உள்ளனர். பின்னர் 10 ஆம் திகதி நாகை துறைமுகத்தில் இருந்து பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்க உள்ளது.

KPV Shaik Mohammed Rowther என்ற தனியார் நிறுவனம் பயணிகள் கப்பலை இயக்குவதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது.

What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

விடுதியில் வெளிநாட்டுப் பெண் உயிரிழப்பு

east tamil

இலங்கைக்கு இந்திய அரசின் நிதி ஒதுக்கீடு

east tamil

போதைப்பொருளை பிடிக்க புதிய தொலைபேசி இலக்கம்

east tamil

கோயிலை புனரமைப்பு செய்தவர் தூண் விழுந்து மரணம்

east tamil

தொலைத்தொடர்பு கோபுரத்திலிருந்து விழுந்து ஒருவர் பலி

east tamil

Leave a Comment