26.2 C
Jaffna
January 22, 2025
Pagetamil
இலங்கை

ஒரு பொமேரியன் நாய்… இரண்டு உரிமையாளர்கள்; கிளிநொச்சி நீதிமன்றத்தில் விசித்திர வழக்கு; மரபணுவை சோதனையிட உத்தரவு!

பொமேரியன் இன வளர்ப்பு நாய்க்கு இருதரப்பினர் உரிமை கோருவதனால் அதன் பரம்பரையின் மரபணுவை பரிசோதனை செய்து அறிக்கையிடுமாறு கிளிநொச்சி நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது.

நேற்று (5) இந்த சுவாரஸ்ய சம்பவம் இடம்பெற்றது.

கிளிநொச்சியிலுள்ள குடியிருப்பாளர் ஒருவர் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில், வளர்ப்பு நாயை கடத்தி கட்டி வைத்து பராமரித்ததாக அயலவர் மீது கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றத்தில் பொலிசார் வழக்கு தொடர்ந்தனார்.

குற்றச்சாட்டப்பட்டவர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி தனது சமர்ப்பணத்தில்- “இந்த வழக்குடன் தொடர்புடைய நாயை குற்றம் சாட்டப்பட்டவரே வளர்த்து வந்தார். கடந்த சில வருடங்களுக்கு முன் அயல் வீட்டில் உள்ள அதே இன நாயுடன் இனவிருத்திக்காக சேர்க்கப்பட்டது. அதன் பின் சில நாட்களில் குற்றச்சாட்டப்பட்டவரது வளர்ப்பு நாயை காணவில்லை. இந்த நிலையிலேயே கடந்த சில தினங்களுக்கு முன்னர் அவரது நாய் வீடு தேடி வந்துள்ளது.

அதன் பின் ஆராய்ந்தபோது, முறைப்பாட்டாளரான அயலவர் குறித்த நாயை வேறு ஒரு இடத்தில் வசிக்கும் எனது மகளின் வீட்டுக்கு அழைத்துச் சென்று வளர்த்துள்ளார். அவரது மகள் தூர பயணம் செய்வதனால் குறித்த நாளை சில நாட்களுக்கு முன் அழைத்து வந்து பெற்றோரின் வீட்டில் விட்டு சென்றுள்ளார்.

அதனாலேயே தன்னை வளர்த்தவர் வீட்டுக்கு நாய் மீண்டும் வந்துள்ளது.இதனையே அயலவர் தனது நாய் என்று உரிமை கோருகிறார். இந்த நாயின் பரம்பரையுள்ள பெண் நாய் ஒன்று தற்போதும் உள்ளது. அதனது மரபணுவையும் இந்த நாயினது மரபணுவையும் பரிசோதனை செய்ய கட்டளை ஆக்க வேண்டும்“ என்றார்.

இதனை ஆராய்ந்த மன்று கிளிநொச்சி மாவட்ட விலங்கியல் மருத்துவ அதிகாரி ஊடாக இரண்டு நாய்களது மரபணுவை பரிசோதனை செய்து அறிக்கையிடுமாறு கட்டளையிட்டது

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

அர்ச்சுனாவின் வழக்கில் புதிய திருப்பம்

east tamil

பாடசாலை உணவுத் திட்டம் தேவை – இரவீ ஆனந்தராஜா

east tamil

திருமண வயது திருத்தம்: பெண் எம்.பி. ஒன்றியத்தின் முக்கிய முன்மொழிவு

east tamil

ஹபரணையில் கைதான ஆயுதக் குழு

east tamil

நீதிபதி இளஞ்செழியனுக்கு திட்டமிட்டு அநீதி இழைக்கிறது அனுர அரசு!

Pagetamil

Leave a Comment