சிரேஷ்ட பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் மகன் ஓட்டிச் சென்றதாக கூறப்படும் சொகுசு காரொன்று குருந்துவத்தை சுற்றுவட்டத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் மீது மோதியதில் கான்ஸ்டபிள் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக குருதுவத்தை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
காரின் சாரதியான சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியின் மகன் கைது செய்யப்பட்டுள்ளார்
விபத்தில் படுகாயமடைந்த கான்ஸ்டபிள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
கார் கான்ஸ்டபிளை மோதிவிட்டு சுற்றுவட்ட நீர்த்தொட்டி மீது ஏறி நின்றதாக போலீசார் கூறுகின்றனர்
நாரஹேன்பிட்டி பொலிஸ் விசேட குழுவொன்று வந்து விபத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
1
+1