52 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயாரை படுகொலை செய்த சம்பவம் தொடர்பில் பொலிஸாரிடம் சரணடைந்த பிரதான சந்தேகநபரையும் அவனது கூட்டாளியையும் 48 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரிக்க சபுகஸ்கந்த பொலிஸாருக்கு மஹர நீதிமன்ற நீதவான் ஜனித பெரேரா நேற்று (3)அனுமதியளித்துள்ளார்.
நீதிமன்றில் பொலிஸார் விடுத்த கோரிக்கையின் பிரகாரம், நீதவான் பின்வரும் அனுமதியை வழங்கினார். பிரதான சந்தேகநபர் 53 வயதான வர்த்தகரும் மற்றைய சந்தேகநபர் 48 வயதுடைய தரகர்களும் சட்டத்தரணிகள் ஊடாக பொலிஸாரிடம் சரணடைந்தனர்.
பெண் கொல்லப்பட்டதாக கூறப்படும் சியம்பலாபே தெற்கில் உள்ள வீடு மற்றும் சடலத்தை கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்ட காரை அரச பகுப்பாய்வாளர் திணைக்கள அதிகாரிகள் திங்கட்கிழமை (2) சோதனையிட்டனர்.
கலஹிட்டியாவ பாலத்திற்கு அருகில் உள்ள கால்வாயில் பெண்ணின் தலை மற்றும் கைகால்களை வீசியதாக சந்தேகநபர்கள் தெரிவித்ததையடுத்து, அந்த பாகங்களை தேடுவதற்கு பொலிஸ் மரைன் பிரிவின் உதவியை நாடியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
செப்டெம்பர் 27ஆம் திகதி பிரதான சந்தேகநபரின் வீட்டில் வைத்து கொலைசெய்து, தலை மற்றும் கைகால்களை உடலிலிருந்து பிரித்து, மறுநாள் (28) காலை கலாஹிதியாவ வீதியிலுள்ள பாலத்திற்கு வர்த்தகரிற்கு சொந்தமான காரில் எடுத்துச் சென்றதாக சந்தேகநபர்கள் தெரிவித்துள்ளனர். முக்கிய சந்தேக நபர் அவற்றை கால்வாயில் வீசினார்.