உலக சிறுவர் தினத்தன்று காலை ஊருபொக்க மகிலியதென்னையில் ஆறு மாத குழந்தை உயிரிழந்த சம்பவம் தொடர்பில் 21 வயதுடைய தாய் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
ஊருபொக்க, மகிலியதென்ன கிராமத்தைச் சேர்ந்த லியாஷா கிம்சாதி என்ற 6 மாத பெண் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
கடந்த 30ம் திகதி மாலை 4.00-4.30 மணிக்குள் குழந்தைக்கு வியர்த்து கொட்டியதால், ஹீட்டர் தண்ணீரை சுட வைத்து, துணியால் குழந்தையின் உடலை சுத்தம் செய்தபோது, வளர்ப்பு நாய் பின்னால் வந்து தனது காலை கவ்வியதால், குழந்தையின் தலை சுவரில் மோதியதாக தாய் தெரிவித்திருந்தார்.
சந்தேக நபர் மொரவக நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1