25.7 C
Jaffna
December 25, 2024
Pagetamil
சினிமா

‘இயற்கையான மரணம் அல்ல…’: ஸ்ரீதேவியின் மரணத்திற்கான காரணத்தை வெளிப்படுத்திய போனி கபூர்!

பிரபல நடிகை ஸ்ரீதேவி 2018 பெப்ரவரி 24 அன்று டுபாய் ஹோட்டல் குளியலறையில் இறந்த நிலையில் கிடந்தார். உறவினரின் திருமணத்திற்காக குடும்பத்துடன் சென்றபோது நிகழ்ந்த இந்த இழப்பை யாராலும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. திரைத்துறை பிரபலங்களையும், பெரும் ரசிகர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய இழப்பு இன்றளவும் மறக்க முடியாததாகவே இருக்கிறது.

அந்தச் சமயத்தில் ஸ்ரீதேவியின் மரணம் குறித்த சர்ச்சைகள் எழத் தொடங்கின. ‘எதிர்பாராதவிதமாகக் குளியலறை தொட்டியில் விழுந்து இறந்தார்’ என சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது பிரேதப் பரிசோதனை அறிக்கை.

இந்த நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட போனி கபூர் தன் மனைவியின் மரணம் குறித்துப் பேசியுள்ளார்.

அவர் கூறுகையில்,

‘இது இயற்கையான மரணம் அல்ல; அது தற்செயலாக நடந்த மரணம். இந்தச் சம்பவம் குறித்த விசாரணையில் 24 அல்லது 48 மணிநேரம் பேசியதால், அதை பற்றி பேச வேண்டாம் என முடிவு செய்தேன்.

இந்திய ஊடகங்களில் இருந்து அதிக அழுத்தம் வருவதால் நாங்கள் இதைக் கடந்து செல்ல வேண்டியிருக்கிறது என்று அதிகாரிகள் கூறினர். பொய்யைக் கண்டறியும் சோதனைகள் உட்பட அனைத்து சோதனைகளையும் கடந்து வந்தேன். இதில் எந்த ஒரு குற்றமும் இல்லை என்று அதிகாரிகள் கண்டறிந்தனர், அதன் பின்னர் வந்த அறிக்கையிலும் இது தற்செயலாக நடந்த விபத்து எனத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டது.

ஸ்ரீதேவி அந்தச் சமயத்தில் கடுமையான டயட்டில் இருந்தார். அடிக்கடி பட்டினி இருப்பார். பார்ப்பதற்கு அழகாக இருக்க வேண்டும் என்று விரும்பினார். திரையில் நல்ல வடிவோடு தெரிய வேண்டும் என்பதற்காகத் தான் நல்ல நிலையில் இருப்பதை உறுதி செய்ய விரும்பினார்.

எனக்குத் திருமணம் ஆனதிலிருந்து அவருக்கு சட்டென மயக்கமாகும் நிலைக்கு (blackouts) இரண்டு முறை சென்றிருக்கிறார். மேலும் அவருக்கு ,ரத்த அழுத்தம் குறைவாக இருக்கும் பிரச்னை இருப்பதாக டாக்டர் சொல்லிக்கொண்டே இருந்தார்’’ என்று தெரிவித்தார்.

தன்னுடைய மனைவியின் உடல்நிலையைக் குறித்து விவரித்த போனி கபூர் படப்பிடிப்பில் நடந்த ஒரு சம்பவத்தை நினைவு கூர்ந்தார்.

‘ஸ்ரீதேவி இறந்த பின் நாகார்ஜுனா இரங்கல் தெரிவிக்க வீட்டிற்கு வந்திருந்தார். அப்போது அவர் என்னிடம் ஸ்ரீதேவி ஒரு திரைப்படத்தின் போது குறுகிய நேரத்தில் உடனடியாக உடல் எடையைக் குறைக்கும் டயட்டில் (crash diet) இருந்தார். அதனால் தான் குளியலறையில் விழுந்து அவருக்குப் பல் உடைந்தது என்று தெரிவித்தார்’’ என்று கூறியிருந்தார்.

தன் மனைவியின் கடுமையான டயட் அவரது உடல்நிலையை மோசமடையச் செய்தது என்ற போனி கபூரின் பேச்சு தற்போது கவனம் பெற்று வருகிறது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

‘சூர்யா 44’ பட டைட்டில் டீசர் டிச.25இல் ரிலீஸ்

Pagetamil

ஜெயம் ரவி-ஆர்த்தி விவாகரத்து செய்தி

east tamil

அனுஷ்காவின் புதிய பட ரிலீஸ் திகதி அறிவிப்பு

Pagetamil

பிரபாஸ் படத்தில் ஒரு பாடலுக்கு ஆடுகிறாரா நயன்தாரா?

Pagetamil

‘சிவகார்த்திகேயன் 25’இல் ஜெயம் ரவி, அதர்வா, ஸ்ரீலீலா

Pagetamil

Leave a Comment