மினுவாங்கொடை அளுதேபொல பிரதேசத்தில் நபர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்தக் கொலைச் சம்பவம் நேற்று (28) இடம்பெற்றுள்ளது.
இறந்தவரின் மகள் முதல் திருமணத்தில் இருந்து பிரிந்து வேறு ஒருவருடன் வாழ்ந்து வரும் நிலையில், இருவருக்கும் தகராறு ஏற்பட்டிருந்து.
இதில் தந்தை தலையிட்ட போது குறித்த நபர், பொல்லினால் அவரை தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்தில் படுகாயமடைந்த 74 வயதுடைய நபர் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1