16 வயது சிறுவனை பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கிய மாத்தறை அக்குரஸ்ஸ பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரை பணி இடைநீக்கம் செய்ய மாத்தறை பொலிஸ் அத்தியட்சகர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
மாத்தறை பொலிஸ் விசேட பொலிஸ் குழுவினால் அவர் கைது செய்யப்பட்டதையடுத்து, இந்த நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளது.
இந்த இளைஞனை மாத்தறை புகையிரத நிலையத்தில் வைத்து இந்த பொலிஸ் சார்ஜன்ட் அழைத்துச் சென்றதாக பொலிஸ் தலைமையகத்திற்கு தகவல் கிடைத்துள்ளது.
புகையிரத நிலையத்துக்கு சிவில் உடையில் சென்ற இந்த சார்ஜென்ட், அங்கு நின்ற 16 வயது சிறுவனை அணுகி, ‘நான் தேடுவது உன்னைத்தான்’ என்று குறிப்பிட்டு, போலீஸ் அடையாள அட்டையைக் காட்டியுள்ளார்.
பின்னர், சிறுவனை புகையிரத நிலையத்துக்கு அண்மையில் உள்ள ஆள்நடமாட்டமற்ற பற்றைக்குள் அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
வன்கொடுமைக்குள்ளான சிறுவன், எப்படியோ அவரிடமிருந்து தப்பியோடி, வீட்டுக்கு சென்று நடந்ததை தெரிவித்துள்ளார்.
மாத்தறை பொலிஸார் இந்த இளைஞனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ள நிலையில், அவர் பரிசேதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடலில் கீறல்கள் காணப்படுவது தெரியவந்துள்ளது.
இந்த சார்ஜென்ட் இன்னும் இரண்டு மூன்று மாதங்களில் பொலிஸ் சேவையிலிருந்து ஓய்வு பெறவிருந்தார்.